• முகப்பு
  • குற்றம்
  • திருச்சி அருகே பழிக்கு பழியாக அரங்கேறிய பயங்கரம் பஸ்சில் இருந்து கீழே தள்ளி வாலிபர் படுகொலை.

திருச்சி அருகே பழிக்கு பழியாக அரங்கேறிய பயங்கரம் பஸ்சில் இருந்து கீழே தள்ளி வாலிபர் படுகொலை.

JK

UPDATED: Nov 15, 2024, 11:03:02 AM

திருச்சி மாவட்டம்

ஜீயபுரம் அருகே கொடியாலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணபதி மகன் விஷ்ணு (24). 

இந்நிலையில் இன்று காலை கொடியாலத்திலிருந்து அரசு பேருந்தில் ஏறி சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி சென்றுள்ளார். 

இந்நிலையில் திண்டுக்கரை அருகே பேருந்து வந்தபோது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 5பேரில் ஒருவர் பேருந்தில் ஏறி விஷ்ணுவை கீழே தள்ளி விட்டுள்ளனர்.

பின்னர் 5 பேர் கொண்ட கும்பல் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் விஷ்ணு தலையில் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

வாலிபர் படுகொலை

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த விஷ்ணு சம்பவ இடத்திலேயே பரிதபமாக உயிரிழந்தார். 

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஜீயபுரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விஷ்ணுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பிச் சென்ற கொலையாளிகளை பிடிக்க 4தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

அரிவாளால் வெட்டி கொலை

இந்த கொலை தொடர்பாக காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கோகுல் என்ற நபரை விஷ்ணு தொடர்புடைய கும்பல் வெட்டி கொலை செய்துள்ளது. 

இதில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட விஷ்ணு கடந்த வாரம் தான் ஜாமினில் வந்துள்ளார். இந்நிலையில் இவரை நோட்டமிட்ட கும்பல் இன்று பழிக்குப்பழியாக இக்கொலையை செய்திருக்கிறது. 

திருச்சி அருகே பட்டப்பகலில் பஸ்சில் பயணம் செய்த வாலிபரை கீழே தள்ளிவிட்டு அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் ஜீயபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

VIDEOS

Recommended