காதலிக்கும் பெண்ணை முத்தமிடுவது பாலியல் துண்புறுத்தல் ஆகாது நீதிமன்றம் அளித்த உத்தரவு.

கார்மேகம்

UPDATED: Nov 16, 2024, 11:35:05 AM

மதுரை

காதலிக்கும் சமயத்தில் பெண்ணை முத்தமிட்ட தற்காக பெண் தொடர்ந்த வழக்கில் காதலன் மீதான வழக்கு ரத்து செய்யப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரும் இளம் பெண் ஒருவரும் காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் பிரிந்துள்ளனர்

இந்நிலையில் அந்த பெண் தனது காதலன் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார் அதன்படி இளைஞர் மீது இந்திய தண்டணை சட்டம் (354) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது

காதல்

இதை எதிர்த்து தன்னுடைய வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மனு அளித்தார் அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஆனந்த்வெங்கடேஸ் இந்த வழக்கில் மனுதாரர் 20-வயதுடையவர் அவர் 19 வயது இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளார்

இருவரும் சந்தித்துக் கொண்ட போது மனுதாரர் இளம் பெண்ணை கட்டியனைத்து முத்தம் கொடுத்ததாகவும் பின்னர் திருமணம் செய்து கொள்ள மறுத்ததாகவும் மனுதாரர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது

முத்தம்

மனுதாரர் மீதான குற்றசாட்டுகளை எடுத்துக் கொண்டாலும் டீன் ஏஜ் பருவத்தினர் காதலிக்கும் போது கட்டியனைத்துக் கொள்வது மற்றும் முத்தமிடுவது இயல்பானதாகவே உள்ளதால் இதை இந்திய தண்டனை சட்டம் (354) உட்பிரிவின் கீழான குற்றமாக ஏற்றுக் கொள்ள முடியாது 

இந்த வழக்கையும் வழக்கு தொடர்பான நடவடிக்கைகளையும் ரத்து செய்ய நீதி மன்றம் விரும்புகிறது ஆகவே மனுதாரர் மீதான வழக்குகளை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிடுகிறது என கூறியுள்ளார்.

 

VIDEOS

Recommended