- முகப்பு
- புதுச்சேரி
- நாங்க துப்புரவு பணியாளர் மட்டுமல்ல கட்டு போடரது, ஊசி போடரது, நர்ஸ் வேலையை கூட நாங்க தான் செஞ்சோம்.
நாங்க துப்புரவு பணியாளர் மட்டுமல்ல கட்டு போடரது, ஊசி போடரது, நர்ஸ் வேலையை கூட நாங்க தான் செஞ்சோம்.
சக்திவேல்
UPDATED: Sep 27, 2024, 12:24:51 PM
புதுச்சேரி
அரசு பொது மருத்துவமனையில் 7 ஆண்டுகளாக TKT SECURITY CENTRE மூலம் 92 துப்புரவு ஊழியர்கள் பணியாற்றி வந்தனர்.
வரும் 1ம் தேதி முதல் ஒப்பந்தம் Deepa signs என்ற நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் 92 ஊழியர்களுக்கு பதிலாக வரும் 1 ம் தேதி முதல் புதிய ஊழியர்கள் நியமிக்க பணியாட்கள் எடுக்கப்படுகிறார்கள்..
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து துப்புரவு ஊழியர்கள் 92 பேர் பணிகளை புறக்கணித்து அரசு மருத்துவமனை முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.
பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள்
இத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எதிர்க்கட்சி தலைவர் சிவா ஊழியர்களின் கோரிக்கையை கேட்டிறிந்தார்.
பின்னர் அங்கிருந்து சுகாதார துறை இயக்குனர் அலுவலகம் சென்று பொறுப்பு இயக்குனர்
செவ்வேல் மற்றும் மருத்துவ அதிகாரிகளிடம் ஒப்பந்த ஊழியர்கள் ஏழு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்கள். அவர்களை நீக்கிவிட்டு புதிதாக நியமிப்பது நியாயமல்ல.. என கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
முதலமைச்சர் ரங்கசாமி
இது பற்றி முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து பேசி முடிவு எடுக்கலாம் என அவர் கூறினார்.இதனையடுத்து அங்கிருந்து வந்த எதிர்க்கட்சி தலைவர் சிவா போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை சந்தித்து முதலமைச்சருடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
அதுவரை தங்களது போராட்டத்தை தொடருவோம் என ஊழியர்கள் தெரிவித்து மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்துள்ளனர்.