மருத்துவர் மீது தாக்குதல் நடத்தியது ஏன் ? - விக்னேஷ் வாக்குமூலம்.
Bala
UPDATED: Nov 13, 2024, 10:06:27 AM
சென்னை கிண்டி அரசு மருத்துவமனை
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்
மருத்துவர் பாலாஜி மீது நிகழ்ந்த தாக்குதலை எதிர்த்து, சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மருத்துவர் தாக்குதல் - அமைச்சர் பேச்சுவார்த்தை.
கிண்டி அரசு மருத்துவமனையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுடன் அமைச்சர் மா.சுப்ரமணியன் மாலை 4 மணிக்கு தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
புற்றுநோய் சிகிச்சை
புற்றுநோய் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தாயாருக்கு உரிய சிகிச்சை வழங்கப்படவில்லை என இளைஞர் குற்றம்சாட்டுகிறார்.
வீட்டில் பயன்படுத்திய காய்கறி வெட்டும் கத்தியைக் கொண்டு வந்து மருத்துவரை குத்தியதாக விக்னேஷ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
மருத்துவர் மீது தாக்குதல் நடத்தியது ஏன்? - விக்னேஷ் வாக்குமூலம்.
விக்னேஷ் டிப்ளமோ படித்துள்ளார் மருத்துவரை கத்தியால் தாக்க வேண்டும் என்று திட்டமிட்டு, வீட்டிலிருந்த கத்தியை எடுத்துக் கொண்டு வந்ததாக விக்னேஷ் தெரிவித்தார்.
விக்னேஷ் வாக்குமூலம்
தாயார் வலியால் அவதிப்பட்டதை மனதில் கொள்ள முடியாமல் காய்கறி வெட்டும் கத்தியை கொண்டு வந்து மருத்துவரை குத்தியதாக விக்னேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார் - காவல்துறை தகவல்.
ஹீமோ சிகிச்சை அளவுக்கு அதிகமாக அளிக்கப்பட்டதால் தான் தாயாரின் உடல்நிலை மோசமடைந்ததாக மருத்துவருடன் விக்னேஷ் வாக்குவாதம் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
துணை முதல்வர் உதயநிதி
"கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும்,"
"சம்பவத்தில் தொடர்புடைய நபர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார், அவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,"
"தனியார் மருத்துவமனை மருத்துவரின் ஆலோசனையை தவறாகப் புரிந்து கொண்டதன் அடிப்படையில், விக்னேஷ் இந்த தாக்குதலை நிகழ்த்தியுள்ளார்,"
"மருத்துவர் தற்போது சீரான உடல்நிலையில் உள்ளார், மருத்துவர்களுக்கான பாதுகாப்பு உறுதிசெய்யப்படும்," - துணை முதல்வர் உதயநிதி
ஈபிஎஸ் கண்டனம்
அரசு மருத்துவமனையில் நடந்த மருத்துவர் மீதான கத்தி தாக்குதல் கொதிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு உரிய கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட மருத்துவர் பாலாஜி தேவையான சிகிச்சை பெறவேண்டும்.
சட்டம் மற்றும் ஒழுங்கை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்துகிறார்.