கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் கொரியர் லாரி ஓட்டுநர் வலிப்பு ஏற்பட்டு பட்டபகலில் துடி துடித்து உயிரிழந்தால் பரபரப்பு.
ஆனந்த்
UPDATED: Nov 13, 2024, 7:14:21 PM
சென்னை
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெகன் வயது 35 இவர் கொரியர் லாரி ஓட்டும் வேலை செய்து வந்தார். நேற்று இரவு மதுரையிலிருந்து கொரியர் ஏற்றிக்கொண்டு லாரியை சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்திற்கு தனியார் டிராவல்ஸ் ஒன்றிற்கு கொரியர்களை டெலிவரி செய்ய எடுத்து வந்துள்ளார்.
இன்று காலை 10 மணி அளவில் சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்திற்கு வந்த அவர் காலை உணவு அருந்த அருகே உள்ள ஓட்டலில் காலை உணவு சாப்பிட்டு உள்ளார் சாப்பிட்டு உடனே அவருக்கு வாந்தி மற்றும் வலிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது
Latest Chennai News
இந்த நிலையில் தான் ஓட்டி வந்த லாரியில் இருக்கும் தண்ணீரை எடுத்து குடிக்க முயன்று உள்ளார் அப்போது வலிப்பு அதிகமான நிலையில் லாரி முன்பு விழுந்த அவர் துடி துடித்து பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் .
சம்பவம் குறித்து கோயம்பேடு பேருந்து நிலைய காவல்துறைக்கு தகவல் அளித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த ஜெகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
கொரியர் லாரி ஓட்டு ஓட்டுநர் மதுரையில் இருந்து சென்னைக்கு வந்து வலிப்பு ஏற்ப்பட்டு உயிரிழந்த சம்பவம் சக ஓட்டுனர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.