தேனி அருகே செய்தியாளரை அரிவாளால் வெட்டிய கொடூரம்.
ராஜா
UPDATED: Nov 14, 2024, 7:27:57 PM
தேனி மாவட்டம்
ஆண்டிப்பட்டி அருகே ஜி.உசிலம்பட்டியை சேர்ந்தவர் பால்பாண்டி இவர் தனியார் நாளிதழில் தேனி மாவட்ட நிருபராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று கோயில் பிரதோஷ நாளில் அவரும் அவரது மனைவியும் அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று பிரதோஷ வழிபாட்டில் ஈடுபட்டு பின் கோயில் பணிகளை செய்து கொண்டிருந்தனர் அப்போது அந்தப் பகுதியில் கையில் அரிவாளுடன் மூன்று நபர்கள் சுற்றித்திரிந்துள்ளனர்,
சந்தேகம்படும்படியாக கையில் அரிவாளுடன் சுற்றித்திரிந்த மூன்று நபர்களை அழைத்து பால்பாண்டி விசாரித்துள்ளார் அப்போது மூன்று நபர்கள் பால்பாண்டியை ஆபாசமாக பேசி தாங்கள் வைத்திருந்த அரிவாளால் பால்பாண்டியின் இடது பக்க தலையில் பலமாக வெட்டி விட்டு தப்பி ஓடி உள்ளனர்.
Latest Crime News In Tamil
இதில் பலத்த காயம் அடைந்த பால்பாண்டியை அருகில் இருந்தவர்கள் மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
மர்ம நபர்கள் வெட்டியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் 20க்கும் மேற்பட்ட தையல் போட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து பால்பாண்டி கொடுத்த புகாரின் பெயரில் கண்டமனூர் போலீசார் விசாரணை செய்ததில் பால்பாண்டியை வெட்டிய போடியை சேர்ந்த கணேசன் மற்றும் சின்னசாமி ஜி உசிலம்பட்டியை சேர்ந்த பாண்டி கண்ணன் ஆகிய மூன்று நபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Latest Theni District News In Tamil
செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு தேனி மாவட்ட பத்திரிக்கையாளர் சங்கங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்
மேலும் அரிவாளுடன் சுற்றித் திரிந்த மர்ம நபர்கள் குறித்து விசாரித்த செய்தியாளரை அரிவாளால் வெட்டிய சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.