• முகப்பு
  • சென்னை
  • ராமாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிலையான மருத்துவர் இல்லாததால் அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

ராமாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிலையான மருத்துவர் இல்லாததால் அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

ஆனந்த்

UPDATED: Oct 24, 2024, 7:07:26 PM

சென்னை

ராமாபுரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் உரிய மருத்துவர்கள் இல்லை என மக்கள் தரப்பிலிருந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

மாதத்தின் சில நாட்களில் ஒரு மருத்துவர் வருவதாகவும், முழு நேர மருத்துவர் இல்லை எனவும் நோயாளிகள் தரப்பில் கூறப்படுகிறது. இருப்பினும் அப்பகுதியை சார்ந்த மக்கள் என்பதால் செய்தியாளர்களிடம் பேட்டியளிக்க யாரும் முன்வரவில்லை.

அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

அதேசமயம் நேரடியாக உள்ளே சென்று பார்த்தபோது மருத்துவர் யாரும் பணியில் இல்லை என்பது தெரியவந்தது. அவசர சிகிச்சை பிரிவில் கூட ஆள் யாரும் இல்லாமல் இருக்கும் நிலை காணப்பட்டது. 

இதனால் அங்கு வரும் உள்ளூர் நோயாளிகள் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும் என்றால் 2 கி.மீ தொலைவில் உள்ள சின்ன போரூர் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல வேண்டியுள்ளது.

இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், முழுநேர மருத்துவர் ஒருவரை பணியமர்த்த வேண்டும் எனவும் மக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

 

VIDEOS

Recommended