• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் 19 புறநோயாளிகள் பிரிவு மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு. நோயாளிகள் கடும் அவதி.

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் 19 புறநோயாளிகள் பிரிவு மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு. நோயாளிகள் கடும் அவதி.

லட்சுமி காந்த்

UPDATED: Nov 14, 2024, 10:12:30 AM

காஞ்சிபுரம் மாவட்டம்

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் மீது நடத்தப்பட்ட கொலை வெறி தாக்குதல் சம்பவத்தை கண்டித்து, இந்திய மருத்துவக் கழகம் மற்றும் தமிழக அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் தமிழகத்தின் பல பகுதிகளில், அரசு மருத்துவர்களுக்கும், பணியாளர்களுக்கும் பணி செய்யும் இடத்தில் பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். 

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் செயல்பட்டு வரும் காது மூக்கு தொண்டை பிரிவு, எலும்பு மூட்டு பிரிவு ,இருதய பிரிவு, குழந்தைகள் பிரிவு, கண் காது மூக்கு தொண்டைப் பிரிவு , குழந்தைகள் நலத் பிரிவு உள்ளிட்ட 19 பிரிவுகளில் பணியாற்றும் மருத்துவர்கள் வேலை புறக்கணிப்பு செய்து தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.

காலை 6 மணி முதல் பல்வேறு பிரச்சினைகளுடன் அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்திருந்த நோயாளிகள், மருத்துவர்கள் பணியில் இல்லாததால் மிகுந்த அவதியுற்றனர்.

 

VIDEOS

Recommended