வளசரவாக்கத்தில் திடீரென பெரும் பள்ளமாக உள்வாங்கிய சாலை வாகன ஓட்டிகள் அச்சம்.
ஆனந்த்
UPDATED: Oct 24, 2024, 11:48:22 AM
சென்னை
வளசரவாக்கம் அருகேயுள்ள சின்னப் போரூர் பகுதியில் திடீரென சாலை உள்வாங்கியது. இதனால் சாலையில் 10 அடி நீளம் மற்றும் 5 அடி ஆழத்திற்கு சாலையில் பெரும் பள்ளம் ஏற்பட்டது.
சென்னை குடிநீர் வாரியம் சார்பில் அண்மையில் குழாய் புதைக்க பள்ளம் தோண்டப்பட்டு மூடப்பட்டதால், அதன்காரணமாக சாலை தற்போது உள்வாங்கியிருக்கலாம் என கூறபடுகிறது.
Chennai News in Tamil
திடீர் பள்ளத்தால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க முதற்கட்ட தடுப்பு நடவடிக்கையாக மாநகராட்சி தரப்பிலிருந்து தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.
இருப்பினும் சாலை மேலும் உள்வாங்கி பள்ளம் பெரிதாகும் வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணித்து வருகின்றனர்.
சென்னை மாநகராட்சி செய்திகள்
அத்துடன் மருத்துவமனை மற்றும் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளிக்கு செல்லும் சாலை என்பதால் விபத்து நோயாளிகள் மற்றும் மாணவிகள் அவதிப்படும் சூழல் உருவாகியுள்ளது.
எனவே இந்த பள்ளத்தை மூடுவதற்கு மாநகராட்சி சார்பில் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு