- முகப்பு
- மாவட்டச் செய்தி
- உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பணிக்கு வராமல் பூட்டப்பட்டுள்ளதால் நோயாளிகள் சிகிச்சை எடுக்க முடியாமல் பெரும் அவதி.
உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பணிக்கு வராமல் பூட்டப்பட்டுள்ளதால் நோயாளிகள் சிகிச்சை எடுக்க முடியாமல் பெரும் அவதி.
ராஜா
UPDATED: Nov 14, 2024, 10:37:01 AM
தேனி மாவட்டம்
உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருவதால் இன்று அரசு மருத்துவமனையில் எந்த ஒரு மருத்துவரும் பணியில் இல்லாததால் வெளியில் இருந்து வரும் நோயாளிகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
நேற்றைய தினம் பாலாஜி என்ற மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவத்தை கண்டித்து உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் மருத்துவர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் வெளி நோயாளிகள் அவசர சிகிச்சைக்காக நாய்க்கடியுடன் வந்தவர் ரத்த வடிந்ததுடன் வந்த முதியவர் ஒருவர் சிகிச்சை இல்லாமல் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
மேலும் கர்ப்பிணி பெண்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் மாத மாத்திரைகள் வாங்க வரும் முதியவர்கள் மற்றும் அன்றாடம் சிகிச்சை எடுக்க வந்தவர்கள் சிகிச்சை எடுக்க முடியாமல் மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாமல் மருத்துவமனை பூட்டப்பட்டு உள்ளதால் அனைத்து பொதுமக்களும் பெரும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
Latest Tamilnadu News In Tamil
பொதுமக்களின் உயிரை பொருட்படுத்தாமல் இதுபோன்ற செயல்களில் மருத்துவர்கள் ஈடுபடுவது நியாயமா என நோயாளிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றார்கள்
உடனடியாக தமிழக அரசும் முதல்வர் தனிக்கவனம் செலுத்தி அரசு மருத்துவமனையை விரைவாக திறந்து சிகிச்சை அளிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.