• முகப்பு
  • குற்றம்
  • கூலித் தொழிலாளர்களையும் பட்டு நெசவு தொழிலாளர்களையும் கஞ்சாவுக்கு அடிமைப்படுத்த முயற்சித்த சிறுவன் உட்பட இரண்டு பேர்.

கூலித் தொழிலாளர்களையும் பட்டு நெசவு தொழிலாளர்களையும் கஞ்சாவுக்கு அடிமைப்படுத்த முயற்சித்த சிறுவன் உட்பட இரண்டு பேர்.

லட்சுமி காந்த்

UPDATED: Nov 14, 2024, 9:21:52 AM

கஞ்சா

தமிழகத்தில் போதைப் பொருள்களின் கலாச்சாரம் அதிகரித்து வருவதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். இதன் தொடர்ச்சியாக கூலித் தொழிலாளர்களும், கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பள்ளி மாணவர்களிடையே கஞ்சா புகைக்கும் பழக்கமும் அதிகரித்து வருகின்றது.

காவல்துறையில் பணி செய்யும் சில காவலர்கள் இதற்கு உடந்தையாக கையூட்டு பெற்றுக் கொண்டு கஞ்சா வியாபாரிகளை ஊக்குவித்து வருகின்றனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்த கீழ்கதிர்பூர் ஊராட்சியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் 2112 அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

Breaking News Today In Tamil 

இதன் அருகிலேயே பட்டு நெசவு பூங்கா செயல்பட்டு வருகின்றது. அங்கு சுமார் 200 க்கும் மேற்பட்ட நெசவாளர்கள், வடமாநிலத்தவர்களும் பணிபுரிந்து வருகிறார்கள்.

அடுக்குமாடி குடியிருப்பில் 17 வது பிளாக்கில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து சிறுசிறு பாக்கெட்டுகளாக பேக்கிங் செய்து அந்த பகுதியில் வசித்து வரும் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வருவதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர், அடுக்குமாடி குடியிருப்பில் 17 வது பிளாக்கில் தினகரன் என்ற சிறுவனின் வீட்டில் திடீரென நுழைந்து, கஞ்சா பேக்கிங் செய்து கொண்டிருந்த இரண்டு பேர்களையும் கையும் களமாக மடக்கிப் பிடித்தனர்.  

Latest Crime News Today In Tamil 

அவர்களிடம் இருந்து சுமார் 4 கிலோ எடையுள்ள கஞ்சா உலர் இலைகள் கைப்பற்றப்பட்டது.

காவல்துறையினரின் விசாரணையில்  பிடிபட்ட 27 வயதுடைய இளைஞர் மாவட்ட ஆட்சியர் வளாகம் அருகே உள்ள தாயார் குளம் பகுதியை சேர்ந்தவர் என்றும் இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளவர் என்றும் தெரியவந்தது.

அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருக்கும் தினகரன் என்ற "17 வயதுடைய சிறுவன்" உடன், வரலாற்று பதிவேடு குற்றவாளி விக்னேஷ் (வயது 27) சேர்ந்து கொண்டு இந்த பகுதியில் வசித்து வரும் கூலி தொழிலாளர்களுக்கும் பட்டுப் பூங்காவில் வேலை செய்யும் நெசவுத் தொழிலாளர்களுக்கும் வடமாநிலத்தவர்களுக்கும் கஞ்சா விற்பனை செய்து அமோகமாக பணம் சம்பாதித்து வருகின்றார்கள் என தெரிய வந்தது. 

Kanchipuram News In Tamil

அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் 2112 வீடுகள் உள்ள இடத்தில் காவல்துறையினரின் சரியான கண்காணிப்பு இல்லாத காரணத்தினால் இங்கு வருகின்ற நாட்களில் அதிக குற்ற சம்பவங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என ரகசிய தகவல் வெளியாகி உள்ளது. 

சுமார் 10,000 க்கும் மேற்பட்ட மக்கள் ஒரே இடத்தில் வசிக்க திட்டமிட்டுள்ள நிலையில் இது போன்ற போதை வஸ்துகள் நடமாட்டத்தை முளையிலேயே கிள்ளி எரிய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

VIDEOS

Recommended