- முகப்பு
- மாவட்டச் செய்தி
- மலை கிராம விவசாயிகளை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபடும் வனத்துறையினர்.
மலை கிராம விவசாயிகளை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபடும் வனத்துறையினர்.
ராஜா
UPDATED: Dec 3, 2024, 10:41:15 AM
தேனி மாவட்டம்
போடிநாயக்கனூர் தாலுகாவிற்கு உட்பட்ட அகமலை ஊராட்சியில் அகமலை, ஊரடி, ஊத்துக்காடு, கரும்பாறை, சொக்கன் அலை உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் வசித்து வருகின்றனர்.
இந்த மலை கிராமங்களில் பல ஆண்டுகளாக கிராம மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர் இந்நிலையில் விவசாய செய்து வரும் சுமார் 400க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு விவசாய நிலங்களை காலி செய்யக்கோரி வனத்துறை சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது
விவசாயிகள்
மேலும் விவசாய பொருட்களை எடுத்துச் செல்வதற்கும் அனுமதி மறுத்து விவசாயிகளுக்கு இடையூறு செய்து வருவதாக புகார் தெரிவித்து தேனி பங்களாமேட்டில் அகமலை ஊராட்சி அனைத்து கிராம விவசாயிகள் சார்பில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஐந்து தலைமுறைகளாக விவசாயம் செய்து வரும் எங்கள் நிலங்களை காலி செய்ய வனத்துறையினர் தொடர்ந்து எங்களுக்கு இடையூறு செய்து வருவதாகவும் மேலும் விவசாய நிலங்களுக்கு தேவையான மின்சாரம் தண்ணீர் ஆகியவற்றை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்
Breaking News Today In Tamil
விவசாய நிலங்களை அப்புறப்படுத்தும் வனத்துறையினர் முயற்சியை நிறுத்தி வைக்க கோரியும் அவர்கள் மீது துறவியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேட்டி - வெற்றிவேல் ( அகமலை ஊராட்சி )