• முகப்பு
  • அரசியல்
  • பகையை மறந்து இணைவோம் மீண்டும்  இணைகிறதா அதிமுக பா.ஜ.க கூட்டணி ?தமிழிசை செளந்தர்ராஜன் பேட்டி

பகையை மறந்து இணைவோம் மீண்டும்  இணைகிறதா அதிமுக பா.ஜ.க கூட்டணி ?தமிழிசை செளந்தர்ராஜன் பேட்டி

கார்மேகம்

UPDATED: Nov 14, 2024, 11:48:53 AM

சென்னை

அதிமுகவை போன்றே பாஜகவும் திமுக அரசை ஆட்சியில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்று நினைப்பதால் மீண்டும்  அதிமுக மற்றும் பாஜக கட்சிகளுக்கிடையே கூட்டணி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் கூறியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளாக இருக்கிறது.

பாஜக கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி 2029- ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே இருக்கும் நிலையில் அந்தத் தேர்தல் தொடர்பான கூட்டணி பேச்சுவார்த்தைகள் தற்போது மும்முரமாகி இருக்கிறது

எடப்பாடி பழனிசாமி 

இந்த நிலையில் 2026- ஆம் வருடத் தேர்தலில் அதிமுக தலைமையில் திமுகவை எதிர்க்கும் அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து திமுக தலைமையிலான கூட்டணி வீழ்த்தப்பட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்

மேலும் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி இருக்குமா என்ற கேள்விக்கு அது பற்றி தேர்தல் நேரத்தில் அறிவிப்பு வெளியாகும்  என தெரிவித்திருந்தார்

( பகையை மறந்து இணைவோம்)

இந்நிலையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேட்டியளித்த பாஜக கட்சியின் மூத்த தலைவரான தமிழிசை  செளந்தர்ராஜன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்தில் பாஜக உடன்படுவதாக தெரிவித்திருக்கிறார்

இது தொடர்பாக பேசிய அவர் அனைத்து கட்சிகளும் ஓரணியில் இணைந்து திமுக அரசை 2026- சட்டமன்றத் தேர்தலில் வீழ்த்த வேண்டும் என தெரிவித்திருக்கிறார்

தமிழிசை செளந்தர்ராஜன்

மேலும் எடப்பாடி பழனிசாமியின் கருத்து  தங்களின் குரலாகவும் இருக்கிறது என அவர் தெரிவித்திருக்கிறார் மேலும் 2026- ஆம் வருட சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாகவே திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படும் எனவும் தமிழிசை செளந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்

மாற்றத்தை விரும்பும் அனைத்து கட்சிகளும் திமுகவிற்கு எதிராக ஒரே அணியில் இணைந்து மக்கள் விரோத அரசை வீழ்த்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்திருக்கிறார்

இவரது பேட்டியின் மூலம் 2026- ஆம் வருட  சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக இடையே மீண்டும் கூட்டணி மலர வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் வல்லுனர்களும் தெரிவித்துள்ளனர்.

 

VIDEOS

Recommended