- முகப்பு
- மாவட்டச் செய்தி
- காட்டுமன்னார்கோவில் அருகில் வீராணம் ஏரியின் ஷட்டர் பழுது காரணமாக மணல் மூட்டை வைத்து அடைக்கும் அதிகாரிகள்.
காட்டுமன்னார்கோவில் அருகில் வீராணம் ஏரியின் ஷட்டர் பழுது காரணமாக மணல் மூட்டை வைத்து அடைக்கும் அதிகாரிகள்.
சண்முகம்
UPDATED: Nov 14, 2024, 8:51:53 AM
கடலூர் மாவட்டம்
காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரியின் திருச்சின்னபுரம் பாசன மதகு இருந்து வருகிறது.
இதன் ஷட்டர் பழுதானதால் தண்ணீர் வெளியேறுவதை தடுக்க முடியாமல் ஷட்டருக்கு முன்பாக நூற்றுக்கணக்கான மணல் மூட்டைகளை வைத்து அடைத்து வருகின்றனர்.
இந்த மதகு மூலம் 10 கிலோமீட்டர் தூர பரப்பளவில் 3200 ஏக்கருக்கு மேல் விவசாய விளைநிலங்களுக்கு பாசனம் பெறும் நிலையில், தற்போது பழுது ஏற்பட்டுள்ளது விவசாயிகளை கலக்கமடைய செய்துள்ளது
இதன் முக்கிய காரணமாக கூறப்படுவது இந்த பாசன மதகு மற்றும் ஏரியின் கரைகளில் உள்ள மற்ற மதகுகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மெட்ரோ வாட்டர் நிர்வாகம் சென்னைக்கு மட்டும் குடிநீர் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக மதகுகளின் ஷட்டர் மீது மணல் மூட்டைகள் போட்டு அடைத்து தண்ணீரை வெளியேறாமல் தடுத்ததன் காரணமாக ஷட்டர்களில் பழுது ஏற்பட்டுள்ளதாக இப்பகுதி விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர்.
வீராணம் ஏரி
மேலும் வீராணம் ஏரியின் பாசன மதகுகளை பொதுப்பணித்துறை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இல்லாமல் மெட்ரோ வாட்டர் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் சென்றதால் இது போன்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் பருவ மழை காலம் ஆதலால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ள நிலையில் மற்றும் பாசனத்திற்கு தண்ணீர் தொடர்ந்து செல்ல முடியாத நிலையில் ஷட்டர் பகுதியில் பழுது ஏற்பட்டுள்ளது நிர்வாக திறனற்ற ஸ்டாலின் ஆட்சியின் அலட்சியத்தையே காட்டுவதாக இப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் வீராணம் ஏரியில் மற்ற பாசன மதகுகளிலும் இதுபோன்ற பிரச்சனை இருக்க வாய்ப்புள்ளது எனவும், அதிகாரிகள் மதகுகளைனை கவனமாக பராமரிக்க வேண்டும் எனவும் விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.