பள்ளிவாசல் நம்பிக்கையாளர்களுக்கான செயலமர்வு
ஏ.எஸ்.எம்.ஜாவித்
UPDATED: Dec 1, 2024, 1:49:29 PM
பள்ளிவாசல் நம்பிக்கையாளர்களுக்கான செயலமர்வு ஒன்றை முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களமும் கொழும்பு தெற்கு பள்ளிவாசல்களின் சம்மேளனும் இணைந்து தெஹிவல ஜும்ஆப் பள்வாசலில் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் தலைமையில் இன்று (1) இடம்பெற்றது.
தெஹவல பள்ளிவாசல் தலைவர் இஸ்மாயில் ஹாஜியார் உள்ளிட்ட நம்பிக்கையாளர்களின் ஒருங்கிணைப்புடன் தெஹிவல மற்றும் மவுண்ட் லெவனியா பகுதி பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
நிகழ்வில் பணிப்பாளர் திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பாகவும் உதவிப் பணிப்பாளர் அலா அஹமட், பள்ளிவாசல் நம்பிக்கையாளர்களின் கடமைப் பொறுப்புகள் தொடர்பாகவும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை தலைவர் றிஸ்வி முப்தி ஜம்மியத்துல் உலமா சபையின் செயற்பாடுகள் தொடர்பாகவும் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.என்.எம்.றொஸான் இலங்கை வக்பு சபை, வக்பு நியாய சபை தொடர்பான விளக்கங்களையும் வழங்கினார்.
இதன் போது பள்ளிவாசல் நிருவாகத்தினர் பணிப்பாளருக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கெளரவித்தனர்.