சுவாமிமலை சுவாமிநாத சுவாமிக்கு கந்த சஷ்டி திருவிழா
ஆர்.தீனதயாளன்
UPDATED: Nov 7, 2024, 9:31:54 AM
தஞ்சாவூர் மாவட்டம்
கும்பகோணம் அருகே சுவாமிமலையில் உள்ள தமிழ் கடவுள் என போற்றப்படும் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோயில் ஐப்பசி மாத கந்த சஷ்டி உற்சவர் விழாவை முன்னிட்டு சந்திரசேகர் அம்பாள் வள்ளி தெய்வானை சண்முகர் சமமேதராக வீரகேசரி வீரபாகுடன் சிறப்பு பூஜைகள் செய்து மகாதீபம் காண்பிக்கப்பட்டு மலை கோவில் இருந்து படி இறங்கும் நடைபெற்றது
அதனைத் தொடர்ந்து நான்காம் படையான சுவாமிமலை முருக பெருமானுக்கு பால் ,தயிர், சந்தனம், ஜவ்வாது, தேன் பன்னீர் ,விபூதி, மஞ்சள், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிஷேகம் செய்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
சுவாமிமலை சுவாமிநாத சுவாமிக்கு கந்த சஷ்டி திருவிழா
இதில் அதிகாலையில் இருந்து தமிழக மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் இன்று மாலை நான்காம் படை வீடான சுவாமிமலை முருகனுக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.