• முகப்பு
  • ஆன்மீகம்
  • இலங்கை அஹதிய்யா பாடசாலையின் புனர்நிர்மானம் மற்றும் நிருவாகத் தெரிவு பொதுக்கூட்டம்

இலங்கை அஹதிய்யா பாடசாலையின் புனர்நிர்மானம் மற்றும் நிருவாகத் தெரிவு பொதுக்கூட்டம்

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Dec 21, 2024, 6:48:25 AM

2024.12.20ஆம் திகதி பு/புளுதிவயல் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் PICDO அஹதிய்யா பாடசாலையின் புனர்நிர்மானம் மற்றும் நிருவாக தெரிவுப் பொதுக் கூட்டமும் புளுதிவயல் முஸ்லிம் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் PICDO அஹதிய்யா அதிபர் அஷ்ஷேய்ஹ் எம்.என்.முஸ்அப்

(ஸாபிதி) அவர்களின் தலைமையில் உளவளத் துணை வளவாளரும் முஸ்லிம் ஹேன்ஸ் எக்செலணட் அஹதிய்யாவின் அதிபருமான எம்.என்.எம்.றமீஸ் அவர்களின் ஒருங்கிணைப்புடன் நடைபெற்றது.

கெளரவ அதிதிகளாக புத்தளம் மாவட்ட முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் அஷ்ஷேய்ஹ்.ஏ.எம்.எம்.இப்ஹாம், அகில இலங்கை அஹதிய்யா பாடசாலைகளின் மத்திய சம்மேளன தேசிய பிரதித் தலைவரும் புத்தளம் மாவட்ட சம்மேளன பொதுச் செயலாளருமான பாரூக் பதீன்ஆசிரியர், புத்தளம் மாவட்ட அஹதிய்யா பாடசாலைகளின் சம்மேளன முந்தல் பிரதேச இணைப்பாளரும் அல் இஸ்ஸோ அஹதிய்யாவின் தலைவருமான அஷ்ஷேய்ஹ் ஏ.எம்.ஸாகீர் (ஹாமி)

  பாடசாலை அபிவிருத்திச் சங்க குழுவின்செயலாளர்.எம்.ஐ.எம்.ஸுப்யான் ,பட்டானி ஸாஹிபு ஜும்ஆ மஸ்ஜித் தலைவர் ஏ.எச்.அமீன் மற்றும் பாடசாலை அபிவிருத்திக்குழு,பழைய மாணவர் சங்கக் குழு,ஏனைய பள்ளி வாசல்களின் நிருவாகிகள், அமைப்புக்களின்பிரதிநிதிகளும், பெற்றோர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்

 அஹதிய்யாவின் வரலாறு, அதன் பயன்கள் , யாப்பும் நிருவாகக் கட்டமைப்பும், பாடத்திட்டம், பரீட்சைகள் , ஆசிரியர்களின் வகிபாகமும் பெற்றோர்களின் பங்களிப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்பன விரிவாக எடுத்துரைக்கப்பட்டதுடன் புதிய நிருவாக குழுத் தெரிவும் இடம்பெற்றது.

புளுதிவயல் PICDO அஹதிய்யாவின் நிருவாகிகளின் விபரம்*

எம்.எல்.எம்.றபாய்தீன் தலைவர், அஷ்ஷேய்ஹ் எம்.என்.முஸ்அப் (ஸாபிதி) செயலாளர்,

கே.ஆர்.நபீஸ் பொருலாளர்,

உப தலைவர்களாக எம்.ஐ.எம்.ஸுப்யான் ,ஏ.பீ.

ஐயூப்கான்,

ஏ.எப்.எப்.பஸ்லிஹா,

,உப செயலாளர் ஏ.டப்ள்.யூ,நபாக் '

எம்.அப்துர்ரஹ்மான் ,

உப பொருளாளர் மற்றும் 

உறுப்பினர்களாக ஆர்.எம்இஹ்ஸான்,

ஏ.ஐ.எச்.எஸ்.மஹ்ஸுமா,

எம்.ஐ.எப்.சில்மியா

 ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

தகவல்

பாரூக் பதீன் ஆசிரியர் 

(பொதுச் செயலாளர்)

புத்தளம் மாவட்ட அஹதிய்யா பாடசாலைகளின் சம்மேளனம்

 

VIDEOS

Recommended