கும்பகோணம் அருகே சுவாமிமலை முருகன் கோவிலில் திருகார்த்திகை திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம்.
தீனதயாளன்
UPDATED: Dec 13, 2024, 9:30:47 AM
தஞ்சாவூர் மாவட்டம்
கும்பகோணத்தில் ஆறுபடை வீடுகளில் ஒன்றான நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோவிலில் திருக்கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமான் சிறப்பு மலர் அலங்காரத்தில் அலங்கரித்து பிரம்மாண்டமான தேரோட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா அரோகரா என கோஷங்கள் இட்டு தேர் படம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனர்.
சுவாமிமலை முருகன் கோவில்
இந்த தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் சிவக்குமார் துணை ஆணையர் உமாதேவி மற்றும திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
பாதுகாப்பு பணியில் சுவாமிமலை போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர், மின்சாரத் துறையினர் ஈடுபட்டனர்.