• முகப்பு
  • ஆன்மீகம்
  • கார்த்திகை மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமை முன்னிட்டு காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் தங்க தேர் உற்சவம்.

கார்த்திகை மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமை முன்னிட்டு காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் தங்க தேர் உற்சவம்.

லட்சுமி காந்த்

UPDATED: Nov 29, 2024, 6:55:53 PM

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில்

சக்தி பீடங்களில் முதன்மையானதும், உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் கார்த்திகை மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமை முன்னிட்டு காஞ்சி காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, காமாட்சி அம்மனுக்கு சிகப்பு மஞ்சள் நிற பட்டாடை உடுத்தி, தலையில் பிறை சூடிய கிரீடம் அணிவித்து லட்சுமி சரஸ்வதி தேவியர்களுக்கு வைலட் நிற பட்டாடை உடுத்தி,

தங்கத்தேர்

முப்பெரும் தேவியர்களுக்கும் திருவாபரணங்கள் சூடி ,மல்லி, கனகாம்பரம், சம்பங்கி உள்ளிட்ட மலர்களால் மாலை சூடி, லட்சுமி,சரஸ்வதி, தேவியருடன் மலர்களால் அலங்கரித்த தங்கத்தேரில் எழுந்தருளி மேள தாளங்கள், நாதஸ்வர வாத்தியங்கள், முழங்க கோவிலின் உட்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். 

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்க தேரை வடம் பிடித்து இழுத்து ஓம் சக்தி பராசக்தி என மனமுருக காமாட்சி அம்மனை வணங்கி சென்றனர்.

 

VIDEOS

Recommended