ராமேஸ்வரம் முருகன்கோவிலில் கந்தசஷ்டி விழா.
கார்மேகம்
UPDATED: Nov 8, 2024, 12:21:16 PM
இராமநாதபுரம்
கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக முருகப் பெருமான் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் தரிசனம் செய்தனர்.
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் கந்தசஷ்டி விழா கடந்த 01- ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது ராமேஸ்வரம் கோவிலில் உள்ள முருகன் சன்னதி மற்றும் மோலவாசல் முருகன் சன்னதியிலும் கந்தசஷ்டி சூரசம்ஹார விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது
கந்தசஷ்டி விழா
விழா தொடங்கியதை தொடர்ந்து தினமும் முருகப்பெருமானுக்கு பால் பன்னீர் திரவியம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று சிறப்பு தீபாராதனை பூஜைகள் நடைபெற்று வந்தது
இந்த நிலையில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று சூரசம்ஹாரம் நடந்தது தொடர்ந்து முருகப்பெருமானை 3 முறை சூரன் சுற்றி வந்து பின்னர் முருகப்பெருமான் வேலால் சூரனின் தலையை எய்து வதம் செய்தார்
வதம் செய்த வேலுக்கு புனித நீர் மற்றும் பாலால் அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை பூஜைகள் செய்யப்பட்டன
சூரசம்ஹார நிகழ்ச்சியில் கோவிலின் பேஸ்கார்கள் கமலநாதன் பஞ்சமூர்த்தி ராமநாதன் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் திரளான பக்கதர்கள் கலந்து கொண்டனர்