• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • ஸ்ரீ புத்தூர் ஊராட்சி அம்புஜவல்லி பேட்டை கிராமத்தில் இறந்த சடலத்தை தூக்கி செல்வதற்கு சாலை வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதி.

ஸ்ரீ புத்தூர் ஊராட்சி அம்புஜவல்லி பேட்டை கிராமத்தில் இறந்த சடலத்தை தூக்கி செல்வதற்கு சாலை வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதி.

சண்முகம்

UPDATED: Oct 21, 2024, 6:34:37 PM

கடலூர் மாவட்டம்

ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்திற்குட்பட்ட ஸ்ரீ புத்தூர் ஊராட்சி அம்புஜவல்லி பேட்டை காலனி தெருவில் சுமார் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்

இந்நிலையில் சுடுகாடு செல்லும் சாலை குறைவான மழை வந்தாலே சுமார் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி நிற்கும்.

இறந்த சடலத்தை தூக்கி செல்வதற்கு சாலை வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதி அடைகின்றனர்.

கடந்த ஆறு மாத காலமாக வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை

தமிழகத்தில் பருவ மழை தொடங்கி முன்கூட்டியே அனைத்து மாவட்டங்களிலும் பருவ மழை எதிர்கொள்ள அரசு அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்

ஆனால் ஸ்ரீ புத்தூர் ஊராட்சியை கண்டு கொள்ளாத வட்டார வளர்ச்சி அலுவலர் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உடனடியாக இச்சாலை சீரமைத்து தருமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

VIDEOS

Recommended