- முகப்பு
- மாவட்டச் செய்தி
- ஏர்வாடி காவல் ஆய்வாளர் ஜீவரெத்தினம் அடாவடி ஆட்டோக்களுடன் தொழிலாளர்கள் காவல் நிலையத்தை முற்றுகை
ஏர்வாடி காவல் ஆய்வாளர் ஜீவரெத்தினம் அடாவடி ஆட்டோக்களுடன் தொழிலாளர்கள் காவல் நிலையத்தை முற்றுகை
கார்மேகம்
UPDATED: Oct 22, 2024, 10:13:22 AM
ராமநாதபுரம் மாவட்டம்
இராமநாதபுரம் ஏர்வாடியில் கடந்த 10- ஆண்டுகளுக்கும் மேலாக சி.ஐ.டி.யு.ஆட்டோ தொழிலாளர்கள் அங்குள்ள அரசு இடத்தில் ஆட்டோ ஸ்டாண்ட் அமைத்து ஆட்டோவை நிறுத்தி ஆட்டோ ஓட்டுனர் தொழிலில் ஈடுபட்டு வந்தனர் அந்த இடத்தில் சி. ஐ. டி. யு. ஆட்டோ சங்கம் சார்பாக தகவல் பலகை அமைக்கப்பட்டிருந்தது
அந்த தகவல் பலகையை புதுப்பித்து அமைக்க சென்ற போது சி.ஐ.டி.யு. ஆட்டோ தொழிலாளர்களை ஏர்வாடி காவல் ஆய்வாளர் ஜீவரெத்தினம் ஆட்டோ தொழிலாளர்கள் மீது பழி வாங்கும் நோக்கத்தோடு மேலதிகாரிகளிடம் அனுமதி பெற்று அமைக்க கூறியுள்ளதாகவும்.
ஆட்டோ ஸ்டாண்ட்
இதில் வேடிக்கை என்னவென்றால் எந்த ஊரிலும் ஆட்டோ ஸ்டாண்ட் அமைக்க உயர் போலீசார் அனுமதி அளித்துள்ளதாக தெரியவில்லை அப்படி இருக்கையில் ஏர்வாடி காவல் ஆய்வாளர் ஜீவரெத்தினத்தை ஆட்டோ சங்க தகவல் ஃபோர்டு என்ன செய்தது என்று தெரியவில்லை ஆட்டோ ஓட்டிப் பிழைக்கும் ஆட்டோ தொழிலாளர்களை ஆட்டோ ஓட்ட விடாமல் தடுப்பது தங்கள் வாழ்வாதாரத்தை சீர்குலைப்பது காவல்துறையின் அதிகாரத்தை பயன்படுத்துவது போன்ற அராஜகத்தில் ஈடுபடுவதாக கூறி காவல் ஆய்வாளரை கண்டித்து ஏர்வாடியில் ஆட்டோ தொழிலாளர்கள் காவல் நிலைய முற்றுகையில் ஈடுபடட்டனர்
இது குறித்து சி. ஐ.டி.யு. தொழில் சங்க மாவட்ட செயலாளர் சிவாஜி ஏர்வாடி ஆட்டோ சங்க தலைவர் சண்முகவேல் பாஸ்கரன் உள்ளிட்டோர் தெரிவிக்கையில் ஏர்வாடியில் கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக எங்கள் சி. ஐ. டி.யு. ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் அங்குள்ள அரசு இடத்தில் இதுவரைக்கும் யாருக்கும் இடையூர் இல்லாமல் ஆட்டோவை நிறுத்தம் செய்து தொழில் செய்து வருகிறோம்
ஏர்வாடி காவல் நிலையம்
அந்த இடத்தில் உள்ள தகவல் பலகையை புதுப்பித்து அமைக்க தொழிலாளர்கள் சென்றபோது அதனை ஏர்வாடி காவல் ஆய்வாளர் தடுத்து தகவல் பலகையையும் பிடிங்கி சென்றுள்ளார்.
இது சம்பந்தமாக உயர் காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும் கீழக்கரை வட்டாச்சியரை சந்தித்து பேசியதன் அடிப்படையில் ஆட்டோ சங்க தகவல் பலகை அமைத்துக் கொள்ள அனுமதி கொடுத்தனர்
மேலும் மூன்று ஆட்டோக்கள் மட்டும் அந்த இடத்தில் நிறுத்த வேண்டும் என்றும் வட்டாச்சியர் அறிவுறுத்தலின்படி ஆட்டோ நிறுத்தம் செய்ய முயன்ற நிலையில் அந்த இடத்தில் ஏர்வாடி காவல் ஆய்வாளர் ஜீவரெத்தினம் ( நோ) பார்க்கிங் ஃபோர்டு அமைத்துள்ளார்
சிஐடியு
இப்படி ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்களை தேவையில்லாமல் அடாவடியாக சிறமம் ஏற்படுத்தும் காவல் ஆய்வாளர் வாழ்வாதர பிரச்னைக்கு என்ன தீர்வு செய்யப்போகிறார் ஏர்வாடி காவல் ஆய்வாளரின் சட்ட நடவடிக்கை ஏழை ஆட்டோ தொழிலாளர்களை பாதிக்குமானால் அப்படியொரு காவல் ஆய்வாளர் தேவையில்லை
அவர் சி. ஐ. டி. யு தொழிற்சங்க தகவல் பலகையை காவல் ஆய்வாளர் ஜீவரெத்தினம் தூண்டுதலின் பேரில் ஏர்வாடி போலீசார் எடுத்துச் சென்றதாகவும் இச் செயலை கண்டித்து போராட்டம் நடத்த சி. ஐ. டி. யு. ஆட்டோ சங்கம் அறிவித்தது அதனையொட்டி கீழக்கரை காவல் துணை கண்காணிப்பாளர் தேவர் குருபூஜை விழா முடியும் வரை கால அவகாசம் தேவை என சொன்னதால் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளோம்
Latest Ramanathapuram News
ஏர்வாடியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டோக்கள் நிறுத்திய இடத்தை தற்போது ஏர்வாடி காவல் ஆய்வாளர் ஜீவரெத்தினம் தேவையில்லாமல் தண்ணிச்சையாக ( நோ) பார்க்கிங் போர்டு வைத்துள்ளதோடு அந்த இடத்தில் ஆட்டோ நிறுத்தினால் அபராதம் விதிப்பேன் என்று அடாவடியாக மிரட்டி வருகிறார்
இந்த நடவடிக்கையை கண்டித்து அனைத்து ஆட்டோக்களையும் ஏர்வாடி காவல் நிலையத்தில் ஒப்படைக்க முடிவு செய்துள்ளோம் என்றனர்.