ஆதித்த கரிகால சோழனால் 967 ஆம் ஆண்டு கட்டப்பட்ட சிங்கீஸ்வரர் கோவில் செப்பேடுகள் கண்டெடுப்பு.

சுரேஷ் பாபு

UPDATED: Oct 22, 2024, 7:02:00 PM

திருவள்ளூர் மாவட்டம் 

மப்பேடு ஸ்ரீசிங்கீஸ்வரர் கோயிலில் கிருஷ்ண தேவராயர் பேரரசு காலத்திலான இரு செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து அத்தகைய செப்பேடுகளை மத்திய தொல்லியல் கல்வெட்டுப் பிரிவு ஆய்வாளர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

மப்பேட்டில் ஆதித்த கரிகால சோழனால் 967 ஆம் ஆண்டு கட்டப்பட்ட சிங்கீஸ்வரர் கோவில் இருந்து வருகிறது.

ஆதித்ய கரிகால சோழன் பிறகு அந்த கோயில் விஜயநகர பேரரசு காலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கோவிலில் பூஜைகள் செய்வதற்காக விஜயநகர பேரரசரான கிருஷ்ண தேவராயர் தெலுங்கு பிராமணர்களை நியமித்துள்ளார்.

அத்தகைய தெலுங்கு பிராமணர்களுக்கு  சந்திரகிரி ராஜ்யத்தில் உள்ள வாகிர நாட்டின் தோண்டிரா மண்டலத்தின் நர்முரு சிமாவில் உள்ள கிழக்கில் வடமங்கலம், தெற்கில் திருமங்கலம், மேற்கில் சந்தூரு, வடக்கே திருமண்யா ஆகிய கிராமங்கள் நடுவே இருந்த கிருஷ்ணராயபுர என்ற ஊரின் பெயரை வாசினாம்பட்டு கிராமத்தில் உள்ள நிலத்தை கோவில் பிராமணராக இருந்த கம்பம்பட்டி திப்பய்யாவின் மகன் அன்னய்யா,

பிசபாட்டி ஒல்லயாவின் மகன் எல்லய்யா, கந்துகுரி சூரய்யாவின் மகன் சர்வாபட்டா, மன்னப்பள்ளி வல்லய்யாவின் மகன் தெலுங்கராயபட்டா உள்ளிட்டோருக்கு, நிலம் தானமாக கிருஷ்ண தேவராயர் வழங்கியதாக செப்பேடுகளில் உள்ளதாக  மத்திய தொல்லியல் தென் மண்டல கல்வெட்டுப் பிரிவு இயக்குனர் முனிரத்தினம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்றைய தினம் மத்திய தொல்லியல் துறையின் தென் மண்டல கல்வெட்டு பிரிவு இயக்குனர் முனிரத்தினம் உத்தரவின் அடிப்படையில் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள மத்திய தொல்லியல் துறையின் கல்வெட்டு பிரிவு துணை கண்காணிப்பாளர் இயேசு பாபு மற்றும் கல்வெட்டுப் பிரிவு உதவியாளர்  கிருஷ்ணமூர்த்தி சிங்கீஸ்வரர் கோவிலில் வந்து நேரில் ஆய்வு செய்தனர்.

கண்டெடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட மூன்று செப்பேடுகளை கோவில் நிர்வாகிகள் ஊராட்சி மன்ற தலைவர்கள் இணைந்து அவர்களிடம் செப்பேடுகளை ஆய்வுக்காக அளித்தனர்.

செப்பேடுகளை பெற்ற தொல்லியல் துறை கல்வெட்டு பிரிவு ஆய்வாளர்கள் ஆய்வு செய்து பின்னர் செப்பேடுகளில் அச்சு மை தடவி சம்ஸ்கிருத மொழியில், நந்திநாகரி  எழுத்துக்களால் அச்சடிக்கப்பட்டிருந்த எழுத்துக்களை அச்சுகளை வெள்ளை தாள்கள் மூலமாக ஆவணமாக சேகரித்தனர்.

பின்னர் செப்பேடுகளை கோவில் நிர்வாகத்துடன் ஒப்படைத்து எழுத்து அச்சுக்களால் பேப்பர்களால் சேகரிக்கப்பட்ட ஆவணங்களை ஆய்வுக்காக கொண்டு சென்றனர்.

இதன் ஆய்வின் முடிவில் முழுமையான தகவல் ஒரு வாரம் பிறகு மத்திய தொல்லியல் துறை தெரிவிக்கும் என தொல்லியல் துறை கல்வெட்டு பிரிவு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

VIDEOS

Recommended