• முகப்பு
  • கல்வி
  • இருங்காட்டுகோட்டையில் இயங்கிவரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி விழும் நிலையில் உள்ளதால் ஒரு மாத காலமாக வகுப்பை பூட்டி வைத்த அவலம்.

இருங்காட்டுகோட்டையில் இயங்கிவரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி விழும் நிலையில் உள்ளதால் ஒரு மாத காலமாக வகுப்பை பூட்டி வைத்த அவலம்.

லட்சுமி காந்த்

UPDATED: Oct 22, 2024, 10:29:16 AM

காஞ்சிபுரம் மாவட்டம்

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட இருங்காட்டுகோட்டை ஊராட்சியில் சுமார் 3,000 மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றார்கள். தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாக இருங்காட்டு கோட்டை பெரும் வளர்ச்சியை பெற்று வருகிறது.

ஏற்கனவே இக்கிராமத்தில் கடந்த 1925ம் ஆண்டு துவக்க பள்ளி துவக்கப்பட்டது. இப்பள்ளிக்கு, கடந்த 1940ம் ஆண்டு அரசு அங்கீகாரம் வழங்கியது. 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி

நடுநிலை ,உயர்நிலை , மேல்நிலை பள்ளி இந்த பகுதியில் இல்லாததால், நீண்ட தூரம் மாணவர்களை வெளியில் அனுப்ப விரும்பாத, பெற்றோர், பிள்ளைகளை பள்ளியில் சேர்க்க தயக்கம் காட்டினர். இதனால், மாணவர்கள் படிப்பை நிறுத்திவிட்டு சென்னைக்கு வேலைக்கு செல்லுகின்ற நிலை ஏற்பட்டது.

இந்த பள்ளியை நடுநிலை பள்ளியாக உயர்த்த பல்வேறு முயற்சிகளை சமூக ஆர்வலர்கள் தொடர்ந்தனர். அதனைத் தொடர்ந்து மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் ஆட்சியில் 2013 ஆம் ஆண்டு இந்தப் பள்ளி நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. 

Latest Kancheepuram News 

இந்தப் பள்ளியில் மாணவ மாணவிகளின் சேர்க்கை அதிகரித்ததை தொடர்ந்து இந்த பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் தேவை என்ற கோரிக்கை எழுந்தது. 

அதே நேரத்தில் இந்தப் பள்ளி கட்டிடத்தின் மேற்கூறைகள் அவ்வப்போது இடிந்து விழுந்து வகுப்பறை பயன்பாட்டுக்கு உபயோகம் இல்லாத நிலை ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல் மழை பெய்யும் போதெல்லாம் வகுப்பறை முழுவதும் நனைந்து பள்ளி மாணவ மாணவிகள் படிக்க வாய்ப்பு இல்லாத சூழ்நிலையும் உண்டானது. 

பள்ளி கட்டடத்தின் உறுதித் தன்மை நிலைகுலைந்த நிலையில் , இதைக் கண்ட மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப பெரிதும் யோசனை செய்து வந்தார்கள். 

இந்த நிலையில் கடந்த மாதம் பெய்த மழையின் காரணமாக வகுப்பறையின் உள்ளே மேற்கூறைகளில் இருந்து மேலும் மேலும் கற்கள் பெயர்ந்து விழுந்ததால் தற்காலிகமாக ஏழாவது வகுப்பு அறை பூட்டப்பட்டது . அந்த மாணவமாணவிகளை வேறு வகுப்பில் உட்கார வைத்துள்ளனர்.

இந்தப் பள்ளியின் நிலைமைகளை கண்ட சில சமூக ஆர்வலர்கள், கீழ் தளம் முதல் தளம் என இரண்டு அடுக்குமாடிக்கொண்ட நான்கு வகுப்பு அறைகளை, ஹூண்டாய் நிறுவனத்தின் சி எஸ் ஆர் பண்டில் கட்டித்தருமாறு வேண்டுக்கோள் விடுத்துள்ளனர்.

பள்ளி கட்டடம் இடிந்து விழுவதற்கு முன்னதாக , முறையாக அதை இடித்து தள்ளிவிட்டு புதிய கட்டிடம் கட்டினால் தான் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்கும் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

 

VIDEOS

Recommended