- முகப்பு
- மாவட்டச் செய்தி
- திருவேற்காடு கோலடி ஏரியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள வீடுகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்.
திருவேற்காடு கோலடி ஏரியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள வீடுகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்.
ஆனந்த்
UPDATED: Oct 21, 2024, 1:18:10 PM
திருவள்ளூர் மாவட்டம்
திருவேற்காடு அடுத்த கோலடி ஏரியில் ஏராளமான குடியிருப்புகள் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டு இருப்பதாக வந்த தகவலையடுத்து பூந்தமல்லி வருவாய் துறை அதிகாரிகள் முதல் கட்டமாக கடந்த இரண்டு தினங்களாக புதிதாக கட்டுமான பணிகள் நடக்கும் வீடுகள் மற்றும் கட்டி முடிக்கப்பட்டு குடி பெயராமல் இருக்கும் வீடுகள் என மொத்தம் 27 வீடுகளை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடித்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியை சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் தொடர்ந்து குடியிருப்புகளை இடிக்கும் பணியில் வருவாய் துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.
தற்போது கோலடி ஏரியில் ஆக்கிரமிப்பு செய்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கட்டப்பட்டு இருப்பதாக வந்த தகவலையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த வீடுகளை மீண்டும் கணக்கெடுக்கும் பணியை தொடங்கி உள்ளனர்.
ஒரு குழுவிற்கு 5 பேர் வீதம் 10 குழுக்களாக பிரிந்து 50 பேர் உரிய அனுமதி மற்றும் ஆவணங்கள் இல்லாமல் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை அளவீடு செய்து கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Latest Thiruverkadu News
இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வீடுகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து மூன்று நாட்களில் கணக்கெடுப்பு பணி முடிந்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்யப்படும் என வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.
ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட வீடுகள் இடிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து வீடுகள் கணக்கெடுக்கும் பனி நடந்து வருவதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.