விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி திருமணத்தில் மின்சாரம் திருட்டு.
லட்சுமி காந்த்
UPDATED: Oct 21, 2024, 11:30:38 AM
காஞ்சிபுரம் மாவட்டம்
படப்பை பகுதியில் உள்ள தனியார் திருமணமான மண்டபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி திருமணம் நடைபெற்றது.
அந்த திருமணத்திற்கு தொல் திருமாவளவன், காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை, திமுக படப்பை மனோகரன் உள்ளிட்ட பிரமுகர்கள் வந்திருந்தனர்.
மின்சாரம் திருட்டு
இந்த திருமணத்திற்கு, சாலையின் மத்தியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட டியூப் லைட்டுகள் அமைக்கப்பட்டிருந்தது.
அதற்கு உண்டான மின்சாரம், உயர் மின்னழுத்த கம்பியிலிருந்து திருடப்பட்டதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதன் மீது நடவடிக்கை பாயுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.