திண்டுக்கல் மாவட்டத்தில் பெட்டிக் கடைகளில் கள்ளச்சாராயம் விற்பனை

அந்தோணி ராஜ்

UPDATED: Oct 21, 2024, 9:24:19 AM

ராஜபாளையம்

ராஜபாளையத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொள்ள வந்த எஸ் டி பி ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் கூறும் போது, தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி அவர்கள் தமிழ்நாடு மக்களின் உணர்வுகளை புண்படுத்தி வருகிறார். தமிழை கொச்சைப்படுத்துகிறார் தமிழுக்கு புகழாரம் சூட்டுகிறார் ஆனால் தமிழை இல்லாமல் ஆக்குவதற்கான நடவடிக்கைகளை செய்து வருகிறார். 

அந்த வகையில் இந்தி மொழி திணிப்பின் ஒரு பகுதியாக ஆளுநர் முன்பில் தமிழ்த்தாய் வாழ்த்தின் ஒருவரி நீக்கிவிட்டு பாடல்கள் ஒளிபரப்பப்பட்டுள்ளது. இதற்கு முழு பொறுப்பேற்க வேண்டியது டிடி தமிழ் தொலைக்காட்சி மட்டுமல்ல ஆளுநரும் பொறுப்பேற்க வேண்டும். ஆளுநர் முன்பாக பாடப்படுகின்ற நிலையில் உடனடியாக நிறுத்திவிட்டு திருத்தி இருக்கலாம். ஒரு கண்ணுக்கு மை ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பு போல் ஆளுநர் தமிழர்களை வஞ்சித்து வருகிறார். 

நெல்லை முபாரக்

எஸ்டிபி கட்சி தொடர்ந்து கூறும் கெட் அவுட் கவர்னர் என்பதைப் போல தமிழகத்தை விட்டு ஆளுநர் வெளியேற வேண்டும். திராவிட மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாத ஆளுநர் இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. 

விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்கள் விவசாய நிலம் சார்ந்த பகுதிகள். இங்கிருந்து விவசாய இடுபொருட்களை தேனிக்கு கொண்டு செல்வதற்கும், விளை பொருட்களை விருதுநகருக்கு கொண்டு வருவதற்கும் வாய்ப்பாக இருக்கக்கூடிய, விவசாயிகளுக்கு பொருளாதார செலவினங்களை குறிக்கும் வகையிலான திட்டமான காமராஜபுரம் - கிழவன் கோயில் மலைப் பாதை திட்டத்தை உடனடியாக தொடங்கிட வேண்டும்.

60 வயதை கடந்த கைத்தறி நெசவாளர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூபாய் 6000 வழங்க வேண்டும். நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் பதிவு செய்த கைத்தறி நெசவாளர்களுக்கு வேலையின்மை அதிகரித்துள்ளதால் வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்த வேண்டும். 

கள்ளச்சாராயம்

நெசவாளர்களின் சேமிப்பில் இருந்து பாதுகாப்பு திட்டத்தின் மூலம் இறப்பிற்கு பிறகு 6 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்பட வேண்டும். நெசவாளர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். 

2021 - 22 அரசு மானிய கோரிக்கைகளில் அறிவிக்கப்பட்ட 20 அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழியில் செயல்பட்டு வரும் அரசு கலைக் கல்லூரி ஒப்பந்த கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. அதை நிரந்தர கட்டடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும். 

திண்டுக்கல் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் என்பது காவல்துறையின் அனுமதி உடன் செல்லிங் பாயிண்ட் என்கின்ற பெயரில் பெட்டிக் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. அதை தடுப்பதற்கு மதுவிலக்கு பிறகு காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

கள்ளக்குறிச்சி போன்று கள்ளச்சாராயம் அளவு கூடிய பகுதிகளில் மட்டுமே நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. திமுக அரசு மக்களை ஏமாற்றியது மட்டுமின்றி மக்களை குடிகாரர்களாக மற்றும் அரசாக உள்ளது. இது வன்மையான கட்டணத்துக்குரியது. 

திமுக

சென்னையை பொருத்தவரை திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அக்டோபர் மாதத்தை தான் கடந்துள்ளோம். டிசம்பரில் தான் ஒவ்வொரு வருடமும் சென்னை அதிக பாதிப்பை சந்தித்து வருகிறது. அதற்கான நடவடிக்கையை எடுப்பதை விட்டுவிட்டு புகைப்படம் எடுக்கும் வேலையை மட்டும் தான் திமுக அரசு செய்து வருகிறது. 

வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் எதுவும் செய்யப்படவில்லை. இந்த வருடம் சென்னை மட்டுமல்லாது வேலூர், சேலம் போன்ற பகுதிகளில் மழைக்காலத்திற்கு முன்பாகவே வெள்ளம் வந்து கொண்டிருக்கிறது. இதற்கு பல முயற்சிகளை எடுப்பதை தவிர்த்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கும் பணியை மட்டுமே திமுக அரசு செய்த வருவதாக நாங்கள் பார்க்கிறோம். 

லவ் ஜிகாத் என்பது இல்லை என்று உச்சநீதி நீதிமன்றம் வரை நிரூபணம் ஆகியிருக்கும் நிலையில் பீதியை பரப்புகின்ற விசுவ இந்து பரிசத் உள்ளிட்ட எந்த அமைப்பையும், எந்த மதத்தினரையும், எந்த அரசியல் கட்சியினராக இருந்தாலும் இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டியது தமிழக காவல்துறையின் கடமை.

ஆனால் காவல்துறை பல இடங்களில் இந்துத்துவ சங்க பரிவார் நடவடிக்கைகளுக்கு அனுமதிப்பதாகவே நாங்கள் பார்க்கிறோம். இல்லையென்றால் எஸ்டிபி கட்சி கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடும்.

ஆதிமுக

வரும் சட்டமன்றத் தேர்தலை பொருத்தவரை அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைக்க வேண்டுமா? இல்லையா? என்பது ஆதிமுக தலைமையிலான சொந்த பிரச்சனை. எஸ்டிபியை அதிமுக கூட்டணியில் இடம் பெற்று இருக்கிறது.

கூட்டணி வலுவாக இருக்கிறது. 2021 ம் ஆண்டு 21% இருந்த வாக்கு வங்கி கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது 23.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. 

திமுக, பாஜகவை காட்டி சிறுபான்மை மக்களை ஏமாற்றி வாக்கு பெற்று நம்மை வஞ்சிக்கிறார்கள் என்பது மக்களுக்கு தெளிவாகத் தெரிந்து விட்டது. இந்த பாராளுமன்ற தேர்தலுடன் இந்த ஏமாற்றம் முடிந்து விட்டது. 2026 ம் ஆண்டு தெளிவாக இந்த ஏமாற்றம் வஞ்சனை எல்லாம் அதிமுகவுக்கு வாக்குகளாக மாறும். மக்களுக்காக யார் உழைக்கிறார்களோ அவர்களை ஏற்றுக் கொள்வதற்கு மக்கள் தயாராக இருக்கிறார்கள். எஸ்டிபி கூட்டணி அதிமுக கூட்டணி தொடரும். 

எஸ் டி பி ஐ தொடங்கியதில் இருந்தே திராவிட நீட்சி என்று சொல்கிற அளவு மொழி உரிமை மாநில உரிமைகளுக்காக சுயாட்சி உரிமைகளுக்காக தேசிய அளவில் போராடும் கட்சியாக உள்ளது. 

சட்டம் ஒழுங்கு 

மாநில உரிமைகளை விட்டுக் கொடுப்பதில்லை. என்றைக்கும் மாநில உரிமைகள் அறிஞர் அண்ணா சுட்டிக்காட்டிய வழியில் பயணம் தொடரும். திராவிடர் உரிமை தமிழ் மக்களின் உரிமைகளுக்காக என்றைக்கும் போராடும் கட்சி எஸ்டிபிஐ. 

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. கஞ்சா அபின் போன்றவை பழைய பொருட்களாக மாறிவிட்ட நிலையில் தற்போது வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் கொகைன் உள்ளிட்ட புதிய போதைப்பொருட்கள் கல்லூரிகள், பள்ளி வாசல்களில் மாணாக்கர்களுக்கு சாக்லேட் வடிவில் கிடைக்கிறது. 

இதை தடுக்க அரசு தவறிவிட்டது. போதை ஒழிப்பு என்று டிஜிபி மாநாடு முதல்வர் நடத்துகிறார். போதை இதுவரை ஒழிக்கப்படவில்லை. அரசியல் தலைவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள். ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்படுகிறார். அதிமுக பாஜக என்று சொல்லி திமுக ஏமாற்றி வருகிறது. 

துப்பாக்கி கலாச்சாரம் 

துப்பாக்கி கலாச்சாரம் வந்துவிட்டது. திருப்பூரில் பாஜகவை சேர்ந்த கார்த்திக் என்பவர் வெடிகுண்டு தயார் செய்திருக்கிறார். இதுவரை நான்கு பேர் இறந்து போயிருக்கிறார்கள். 

பேஸ்புக் பதிவுக்கு நடவடிக்கை எடுக்கும் காவல்துறை இதை தடுப்பதில்லை. சட்டம் ஒழுங்கு கேள்விக்குறி ஆகிவிட்டது என்பதை தவிர்த்து கிலோ என்ன விலை என்று கேட்கும் அளவுக்கு மோசமாகிவிட்டது. 

முன்னாள் முதல்வர் கலைஞர் கூறியது போல் காவல்துறையின் ஈரல் கெட்டுப் போயிருக்கிறது. காவல்துறை இருக்கிறதா ? இல்லையா ? என்பது தெரியவில்லை. தமிழ்நாடு போதை மாநிலமாக மாறிக்கொண்டிருக்கிறது. அதில் தான் தமிழகத்திற்கு முதலிடம் கிடைக்கும். 

மது ஒழிப்பு படை

காவல்துறையினர் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக மாறுகின்றனர். என்கவுண்டர் இங்கே அவசியமில்லை. சிறையில் அடைப்பது அவசியம் இல்லை. மாறாக போதைப் பொருட்கள் எங்கிருந்து வருகிறது என்று அறிந்து வைத்திருக்கக்கூடிய உளவுத்துறை அதை தடுக்க வேண்டும். 

மது ஒழிப்பு படை எதற்காக இருக்கிறது என்றே தெரியவில்லை. அனைத்து காவல்துறையினருக்கும் போதை பொருட்கள் எங்கே இருந்து வருகிறது என்று தெரியும். ஆனால் அவர்கள் அதை விட்டுக் கொண்டிருக்கின்றனர். இதற்குப் பின்னால் ஆளுங்கட்சி பிரமுகர்கள் இருக்கிறார்களோ என்ற சந்தேகம் உள்ளது.

போர்க்கால அடிப்படையில் சட்டம் ஒழுங்கை காக்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கும் தமிழக முதல்வருக்கும் இருக்கிறது. இல்லை என்றால் 2026 தேர்தலில் பதில் சொல்ல வேண்டி வரும்.

 

VIDEOS

Recommended