தூய்மை பணியாளர்கள் திருச்சி மாநகராட்சியை முற்றுகை.

JK

UPDATED: Oct 22, 2024, 2:33:01 PM

திருச்சி மாவட்டம்

சிஐடியு சங்கத்தின் சார்பில் திருச்சி மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் கேட்டு பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை எந்த தீர்வு காணப்படவில்லை.

தீபாவளி திருநாள் வருவதற்கு தற்போது ஒரு வாரம் உள்ள நிலையில் இன்று திருச்சி மாநகராட்சி அலுவலகத்தை சி ஐ டி யு மாவட்ட தலைவர் இளையராஜா தலைமையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் போது உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் வேதா நிறுவனமும் தூய்மை பணியாளர்களுக்கு உரிய தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இதனை தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ளே நுழைய முயன்ற அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த முற்றுகை போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயற்குழு உறுப்பினர் கார்த்திகேயன், மாமன்ற உறுப்பினர் சுரேஷ் உட்பட தூய்மை பணியாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டியளித்த நிர்வாகி மாறன் :

கடந்த ஒரு மாதமாக மாநகராட்சி அதிகாரியுடன் போனஸ் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் தட்டிக் கேட்க வேண்டியவர் எதையும் கேட்கவில்லை.

இந்த மாநகரத்தில் உள்ள அமைச்சருக்கு திருச்சி நடக்கும் எந்த தகவலும் செல்லாமல் இருக்காது. ஆனால் உங்களுக்கு வாக்களித்துள்ளனர்.

முதல்வருக்கும் அருகிலே இருக்கும் அமைச்சர் ஏன் தொழிலாளர்கள் பக்கம் திரும்பிப் பார்க்கவில்லை. ஒப்பந்தத்தில் கூறியபடி தொழிலாளருக்கு உரிய போனஸ் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

 

VIDEOS

Recommended