"உதிரம் கொடுப்போம், உயிர் காப்போம்"

ஏ. என். எம். முஸ்பிக்

UPDATED: Sep 15, 2024, 3:51:07 AM

புத்தளம் மாவட்ட வைத்தியசாலையின் இரத்த வங்கியில் ஏற்பட்ட இரத்தப் பற்றாக்குறையை சமாளிக்க, வைத்தியசாலை நிர்வாகம் சமீபத்தில் அவசர இரத்தத் தேவை குறித்து அறிவித்தது.

 இதற்குப் பதிலளித்து, புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின் 2003 ஆம் ஆண்டு சாதாரண தரம் மற்றும் 2006 ஆம் ஆண்டு உயர்தரத்தின் பழைய மாணவர் குழுவான "சாகிரியனஸ் டியூட்ஸ்" குழு உடனடியாக இரத்ததான நிகழ்வை ஏற்பாடு செய்தது.

original/img-20240901-wa0070
இந்த நிகழ்வு இன்று புத்தளம் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது, இதில் 64 பேர் இரத்த தானம் செய்தனர். புத்தளம் தள வைத்தியசாலையின் வைத்தியர் வைஷ்ணவன் மற்றும் அவரது குழுவினர் இந்த நிகழ்வில் பங்காற்றினர்.



 

VIDEOS

Recommended