தமிழக அரசின் நில ஒருங்கிணைப்பு சட்டம் 2024-ஐ திரும்ப பெறாவிட்டால் 2025 ஜனவரி 1-ம்தேதி போராட்ட ஆண்டாக அறிவிப்போம் - பி.ஆர்.பாண்டியன்.
தருண்சுரேஷ்
UPDATED: Nov 7, 2024, 4:04:45 PM
திருவாரூர் மாவட்டம்
மன்னாா்குடியில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கினைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு விரோதமான கொள்கைகளை சட்டமாக்கி திமுக அரசு பொறுப்பேற்றது முதல் செயல்படுத்தி வருகிறது .
குறிப்பாக இந்தியாவில் எந்த மாநிலத்திலும் கொண்டுவரப்படாத சட்டமாக தமிழ்நாடு அரசு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2024 என்கிற ஒரு சட்டத்தை கொண்டு வந்து அரசியலில் வெளியிட்டு இருக்கிறது இது வன்மையாக கண்டிக்கத்தக்கது .
இந்த சட்டம் நிறைவேற்றப்படுகின்ற நாளில் இருந்து செயல்பாட்டில் வந்துள்ளது இதன் மூலம் விளைநிலங்கள் , குடியிருப்புகள் , விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் சொந்தமில்லை
தமிழ்நாடு அரசு நில ஒருங்கிணைப்பு சட்டம்
கார்ப்பரேட் நிறுவனங்கள் தொழில் துவங்குகிறோம் என்கிற பெயரில் ஒப்பந்தம் போடுகின்ற நிறுவனங்கள் தன் விருப்பத்திற்கு விவசாயிகள் பொதுமக்கள் ஒப்புதல் இல்லாமல் விலை நிலங்களையும் குடியிருப்புகளையும் அபகரித்துக் கொள்ளலாம்
இந்த நிறுவனங்களுக்கு ஏரி , குளம் , குட்டைகள் , நீர்வழி பாதைகளான ஆறுகள் வாய்க்கால்கள் இடையூறாக இருக்குமே ஆனால் அந்த நிறுவனங்களே அபகரித்து கொள்வதற்கு வழி வருகின்ற மிக மோசமான கருப்பு சட்டமாக தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2024 அரசியலில் வெளியிட்டு இருப்பதை தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த விவசாயிகளின் பிறப்புரிமை
அடையாளத்தையே அழிக்கின்ற நிலை மிக மோசமான சட்டமாக குடியுரிமையை பெற்று இருக்கின்ற பிறப்புரிமை பெற்றிருக்கின்ற விவசாயிகள் பொதுமக்களை அகதிகளாக ஆக்குகின்ற மிக மோசமான கருப்பு சட்டமாக தமிழ்நாடுஅரசு கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறது .
Online Agriculture news
இதனை அனுமதிக்க மாட்டோம் இந்த சட்டத்தை திரும்ப பெறுகின்ற வரையிலும் தமிழ்நாட்டில் விவசாயிகள் , பொதுமக்களை ஒன்றுபடுத்தி தீவிரமான போராட்டத்தில் நாங்கள் களம் இறங்க இருக்கின்றோம் .
கார்ப்பரேட் நிறுவனங்களுடைய கைக்கூலியாக திமுக அரசு செயல்படுவதை அனுமதிக்க முடியாது
வேளாண்மை செய்திகள்
வருகின்ற 2025 ஜனவரி ஒன்றாம் தேதி திமுக அரசின் நான்காண்டு காலத்தில் விவசாயிகள் பொதுமக்கள் விரோத சட்டங்களையும் திட்டங்களையும் செயல்பாடுகளையும் பட்டியலிட்டு வெளியிட்டு அதற்கான போராட்ட ஆண்டாக கூட நாங்கள் அனுசரிக்க தயங்க மாட்டோம் என நாங்கள் முதலமைச்சருக்கு எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் .
இந்திய மக்கள் தமிழ்நாடு மக்கள் அவர்களுடைய அடையாளங்களை இந்த சட்டம் மூலம் அழித்திருப்பது மிகப்பெரிய கரும்புள்ளியாக இந்த சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது இதனை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்றார்.