• முகப்பு
  • விவசாயம்
  • உர மேலாண்மையால் அதிக விளைச்சல் பெறலாம் விவசாயிகளுக்கு வேளாண்மை துறையினர் அறிவுரை

உர மேலாண்மையால் அதிக விளைச்சல் பெறலாம் விவசாயிகளுக்கு வேளாண்மை துறையினர் அறிவுரை

கார்மேகம்

UPDATED: Oct 28, 2024, 12:21:10 PM

இராமநாதபுரம்

உர மேலாண்மை மூலம் அதிக நெல் சாகுபடி பெறலாம் என வேளாண்துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்

( நெல் சாகுபடி)

இது தொடர்பாக ராமநாதபுரம் விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்பு உதவி இயக்குனர் சிவசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது 

ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை யொட்டி நெல் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு உள்ளனர் நெல் விளைச்சலில் 40- விழுக்காடு உர நிர்வாகத்தை பொருத்தே அமைகிறது

இயற்கை உரம்

இயற்கை எருக்களான பசுந்தாள் உரம் தொழு உரம் மண்புழு உரம் மக்கிய தென்னை நார் கழிவு செயற்கை உரங்களான யூரியா சூப்பர் பாஸ்பேட் பொட்டாஷ் உரங்கள் உயிரி உரங்களான பாஸ்போ பாக்டீரியா அசோஸ் பைரில்லம் நுண்ணூட்ட சத்துக்களைச் சேர்த்து

சமச்சீர் உணவாக நெல்லுக்கு அளிப்பது தான் ஒருங்கிணைந்த உர மேலாண்மை நிர்வாகம் இதனால் நிலவளத்தை காத்து விளைச்சலை அதிகரிக்க செய்ய முடியும் நெல் பயிருக்கு அடியுரம் மண் ஆய்வு அடிப்படையில் வயலில் வேதியியல் உரங்களை இட வேண்டும்

இதனால் மண்ணிலிருந்து பயிருக்கு கிடைக்கும்  உரச்சத்தின் அளவையும் பயிரின் உர தேவையையும் தீர்மானிக்கலாம் இதனால் தேவைக்கு குறைவான அல்லது அதிகமாக உரமிடுவதைத் தவிர்க்கலாம் 

விவசாயம் நியூஸ் அப்டேட்ஸ்

நெல் பயிருக்கு மேலுரமிடுவதில் மிகுந்த கவனம் தேவை நெல் விதைத்த 20 முதல் 25 நாட்களுக்குள் மேலுரம் இட வேண்டும்  நெல் வளர்ச்சியில் தூர் கட்டும் பருவம் தண்டு உருளும் பருவம் பூக்கும் தருணம் ஆகிய காலங்களில் பயிர்களுக்கு உணவு சத்துக்களின் தேவை அதிகம் இதற்கு தழைச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது.

மானாவாரியில் பகுதி பாசனம் செய்யும் நெல் ரகங்களுக்கு தழைச் சத்து அடங்கிய யூரியாவை நெல் நட்ட 20/ 40/ 60/ - ம் நாட்களில் முறையே ஏக்கருக்கு 22 கிலோ யூரியா என்ற அளவில்5 கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து இட வேண்டும் சாம்பல் சத்து உரத்தை நட்ட 20/40/ - ம் நாளில் முறையே ஏக்கருக்கு 8.9. கிலோ இட வேண்டும் விதைத்த முதலிலும் இடையேயும் நல்ல மழை பெய்து பயிரின் வளர்ச்சி நன்கு அமைந்திருப்பின் இரண்டாம் தருணமான 40/ முதல் 45/ நாட்களுக்குள் இடப்படும் யூரியாவை ஏக்கருக்கு 35/ கிலோவாக அதிகரிக்கலாம்

விவசாய செய்திகள்

உரமாக யூரியா 1- சதம் டி.ஏ.பி. 2- சதம் கரைசலை 2 முறை குருத்து தருணத்திலும் 10- நாட்கள் கழித்து மீண்டும் ஒருமுறையும்  தெளிப்பது நல்லது நெல் நுண்ணூட்டச் சத்து ஏக்கருக்கு 5- கிலோ என்ற அளவில் தேவையான அளவு மணல் கலந்து வயலில் ஈரமிருக்கும் போது இட வேண்டும்

நுண்ணூட்டச்சத்து உரத்தில் பயிருக்கு தேவையான துத்தநாகம் இரும்பு மாங்கனீசு காப்பர் போரான் மற்றும் மெக்னீசியம் ஆகிய நுண்ணூட்டச்சத்துகள் அடங்கியுள்ளதால் பயிர்கள் நன்கு வளர்ச்சியடைந்து மகசூல் அதிகரிக்கும்

வேளாண் செய்திகள்

சிங்க் சல்பேட் உரத்தினை ஏக்கருக்கு 10 - கிலோ எடுத்து போதிய மணலை கலந்து வயலில் ஈரம் இருக்கும் போது இட வேண்டும் நெல் பயிரில் உயர் விளைச்சல் பெறுவதற்கு ஒருங்கிணைந்த உர மேலாண்மை நிர்வாகத்தை விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டும்

இந்த வழிமுறைகளை முறையாக பயன்படுத்துவதால் நெல் மகசூலை அதிகரிக்கலாம் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

 

VIDEOS

Recommended