• முகப்பு
  • இந்தியா
  • சொந்த கிராமத்திற்கு 100 கோடி நிதியுதவி குழந்தைகளின் இலவச கல்விக்காக அள்ளிக் கொடுத்த தொழிலதிபர்.

சொந்த கிராமத்திற்கு 100 கோடி நிதியுதவி குழந்தைகளின் இலவச கல்விக்காக அள்ளிக் கொடுத்த தொழிலதிபர்.

கார்மேகம்

UPDATED: Nov 11, 2024, 11:36:57 AM

கு‌ஜராத்

குஜராத் மாநிலம் நிஸ்ரயா கிராமத்தில் பிறந்தவர் மகேந்திரா மேக் படேல் தொழிலதிபரான இவருக்கு தற்போது 86 - வயதாகிறது அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் செயற்கை நுண்ணறிவில் முதுகலைப் பட்டம் பெற்ற மகேந்திரா மேக் படேல் அமெரிக்காவில்  தற்போது நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்

இந்த நிலையில் தன்னைப் போலவே தனது கிராமத்து மக்களின் கல்வியறிவு பெற்று வாழ்க்கையில் மேலோங்க வேண்டும் என்கிற ஆசையில் தனது சொந்த கிராமத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக சுமார் ரூ. 100 - கோடி நிதியுவி அளித்துள்ளார்.

Today Breaking News In India 

தற்போது நிஸ்ரயா கிராமத்தில் அதிநவீன  உயர்நிலைப் பள்ளியைக் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார் இந்த பள்ளியில் சிறந்த ஆசிரியர்கள் மற்றும் வசதிகள் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என மேக் படேல் விரும்புகிறார்

இது குறித்து மகேந்திரா மேக் படேல் கூறுகையில் நான் இந்தியன் வங்கியில் ரூ. 75- கோடி பிக்சட் டெபாசிட் செய்து இருந்தேன் தற்போது அந்த பணத்தை நிஸ்ரயா கிராமத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்த முடிவு செய்துள்ளேன்

நிஸ்ரயா கிராமத்தில் உயர்நிலைப்பள்ளி இல்லை குழந்தைகள் மற்ற கிராமங்கள் அல்லது நகரங்களுக்கு படிப்பதற்காக செல்ல வேண்டும்

குழந்தைகள் அனைவரும் உயர் கல்வி பெற பள்ளி கட்டி கொடுப்பது எனது கனவு மாணவர்கள் இலவசமாக கல்வி கற்க வேண்டும் என்றார்

Latest Breaking News In India - 

கடந்த 6 - மாதங்களில் மட்டும் நிஸ்ரயா கிராமத்தை சேர்ந்த மாணவர்களுக்கு ரூ.30 லட்சம் வழங்கியுள்ளார்

அவர்களின் உயர்கல்வி பி.ஏ. பி.காம். பி.சி.ஏ. என பட்டப் படிப்புகளுக்கு மேக் படேல் உதவி செய்து வருகிறார் இவரது தொடர் உதவிகளால் அந்த கிராமத்தில் நல்ல வடிகால் அமைப்பு சூரிய சக்தியால் இயங்கும் தெருவிளக்குகள் சி.சி.டி.வி. கேமராக்கள் அனைத்து வீடுகளுக்கும் கழிப்பறை வசதி என்று நவீனமாகி இருக்கிறது

நிஸ்ரயா கிராமம் எங்கோ அமெரிக்காவில் சாதித்து வசதி வாய்ப்புகளுடன் இருந்தாலும் தன்னுடைய வேரான சொந்த கிராமத்தை மறக்காமல் ரு.100 கோடி நிதியுதவி அளித்து கிராமத்தின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தும்  மேக்படேலை பலரும் பாராட்டி வருகின்றனர். 

 

VIDEOS

Recommended