• முகப்பு
  • இந்தியா
  • டிஜிட்டல் அரெஸ்ட் என்ற பெயரில் இளம்  பெண் ஆடையை கழற்ற சொல்லி அட்டூழியம்.

டிஜிட்டல் அரெஸ்ட் என்ற பெயரில் இளம்  பெண் ஆடையை கழற்ற சொல்லி அட்டூழியம்.

கார்மேகம்

UPDATED: Dec 7, 2024, 11:29:47 AM

மகாராஷ்டிரா

இணையவழி மோசடி கும்பல் அதிகரித்து வரும் நிலையில் சமீப காலமாக டிஜிட்டல் கைது எனப்படும் சைபர் குற்றங்களில் மர்ம நபர்கள் ஈடுபட்டு வருகின்றனர்

அரசு அதிகாரிகள் காவல் துறை அதிகாரிகள் மத்திய அரசின் விசாரணை அதிகாரிகள் போன்றவராக தங்களை காட்டிக் கொள்ளும் இந்த மர்ம நபர்கள் ஆடியோ மற்றும் வீடியோ வழியாக அப்பாவி மக்களை தொடர்பு கொண்டு மிரட்டி பணம்  பறித்து வருகின்றனர்.

Latest Breaking News In India

இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 26 வயது இளம் பெண் ஒருவர் மர்ம நபர்களால் டிஜிட்டல் கைது செய்யப்பட்டு அவரை ஆடைகள் கழற்றுமாறு கூறி அட்டூழியம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உங்களை விரைவில் கைது செய்வோம் என்று மிரட்டிய அந்த மர்ம நபர்களிடம் அந்த பெண் தனக்கும் இந்த மோசடிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கெஞ்சி கேட்டுக் கொண்ட போதிலும் அவர்கள் தொடர்ந்து பயமுறுத்தியதாக கூறப்படுகிறது

India Today News 

மேலும் அந்த பெண்னை மிரட்டி சுமார் இரண்டு லட்சம் ரூபாய் பறித்த தாகவும்  தெரிகிறது

முழு உடல் சோதனை செய்ய வேண்டும் என்று கூறி ஆடைகளை கழற்றுமாறு அந்த பெண்னை மிரட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

இது குறித்து காவல் துறையிடம் புகார் அளிக்கப்படுகிறது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

VIDEOS

Recommended