• முகப்பு
  • இந்தியா
  • இட ஒதுக்கீடு பயனைப் பெற மதமாற்றத்தை அனுமதிக்க முடியாது உச்ச நீதிமன்றம் அதிரடி.

இட ஒதுக்கீடு பயனைப் பெற மதமாற்றத்தை அனுமதிக்க முடியாது உச்ச நீதிமன்றம் அதிரடி.

கார்மேகம்

UPDATED: Nov 29, 2024, 2:32:45 PM

டெல்லி

இட ஒதுக்கீடு நலன்களைப் பெற மத  மாற்றத்தை அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவும் வரவேற்பும் தெரிவித்துள்ளனர்

இந்த தீர்ப்பை இந்து முன்னனி அமைப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு என்று குறிப்பிட்டு வரவேற்றுள்ளது கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறிய பெண் ஒருவர் தன்னை ஹிந்துவாக கூறி தன்னுடைய ஒதுக்கீடு நலன்களைப் பெற முயற்சி செய்த வழக்கில் உச்சநீதிமன்றம் இதை அனுமதிக்க முடியாது என்று குறிப்பிட்டதுடன் இந்த விதமான நடவடிக்கை இட ஒதுக்கீட்டுக் கொள்கையின் சமூக நோக்கிலான மனோபாவத்தை பாதிக்கும் என்றும் குறிப்பிட்டது

நீதிபதிகள் பங்கஜ் மிட்டல் மற்றும் ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வில் தீர்ப்பில் இட ஒதுக்கீடு நலன்களைப் பெற மத மாற்றத்தை மேற்கொள்ளும் ஒருவரின் நோக்கம் சமூக நீதிக் கொள்கையை கேள்விக்கு உள்ளாக்கும் என்றும் தெரிவித்தது.

மதம் மாற்றம்

மேலும் ஒவ்வொரு குடியுரிமையாளருக்கும்  அவரது விருப்பத்திற்கேற்ப மதத்தை பின்பற்றும் உரிமை அரசியலமைப்பின் 25- வது பிரிவின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது ஆனால் இட ஒதுக்கீடு நலன்களைப் பெற வேண்டும் என்பதற்காகவே மத மாற்றம் மேற்கொள்ளப்படுவதை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது

இந்த வழக்கில் புகாரளித்தவர் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுபவர் என்றும் நீதிமன்றம் கூறியது இத்தகைய இரட்டைத் தரவுகளை அங்கீகரிக்க முடியாது என்றும் இட ஒதுக்கீடு சமூக நீதிக் கொள்கையின் அடிப்படையான நோக்கத்திற்கும் புறம்பாக இது இருக்கும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்

சாதி சான்றிதழ் 

புதுச்சேரியைச் சார்ந்த செல்வராணி என்பவர் ஞானஸ்தானம் பெற்ற கிறிஸ்தவர் இவர் தன்னை இந்து ஆதிதிராவிடர் வகுப்பை ( பட்டியல் ) சமுதாயம் சார்ந்தவர் எனக் கூறி சாதி சான்றிதழ் கோரியுள்ளார் சான்றிதழ் சரிபார்ப்பின் போது அவர் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என கண்டறியப்பட்டு அவரது வின்னப்பத்தை புதுச்சேரி மாநில அரசு அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்

இதனை எதிர்த்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் மதம் மாறியவர்களுக்கு இது போல் சாதி சான்றிதழ் வழங்க முடியாது எனக் கூறி அவரது வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

இதனை எதிர்த்து செல்வராணி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார் இந்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதி மன்ற நீதிபதிகள் பங்கஜ் மிட்டல் ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு ஒரு மதத்திலிருந்து இன்னொரு மதத்திற்கு மாறுவது என்பது அதன் கொள்கை மற்றும் கோட்பாடுகளால் உண்மையாக ஈர்க்கப்பட்டு அதனடிப்படையில் மதம் மாறியதாக இருக்க வேண்டும்

உச்சநீதிமன்றம் தீர்ப்பு

ஆனால் கிறிஸ்தவ மதத்தை தீவிரமாக கடைப்பிடிக்கும் ஒருவர் அரசு வேலை வாய்ப்பிற்காக இந்துவாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள முற்படுவதை ஏற்க முடியாது இது அரசியலமைப்புச் சட்டத்தையே மோசடி செய்வதற்கு சமம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

இந்த தீர்ப்பை இந்து முன்னனி அனைத்து இந்து மக்களின் சார்பாக மனதார வரவேற்கிறது

மதம் மாறிய கிறிஸ்தவர்கள் மதம் மாறிய பிறகும் தங்களை இந்து எனக் கூறிக் கொண்டு மோசடியாக அரசு சலுகைகளை அனுபவித்து வருவதை தடுக்க வழிவகை செய்யும் என இந்து முன்னனி தெரிவித்துள்ளது

மோசடி

தமிழகத்தில் சிலர் மதம் மாறிய பிறகும் தன்னை இந்து பட்டியல் சமுதாயத்தவர் என ஏமாற்றி சான்றிதழ் பெற்று உண்மையான இந்து சமுதாய மக்களின் சலுகைகளை மோசடியாக அபகரித்து வருகின்றனர்

இத்தகைய மோசடிக்கு தற்போது உச்சநீதிமன்றம் முற்றுப் புள்ளி வைத்துள்ளது 

இந்த நிலையில் மதம் மாறியவர்களுக்கு இந்து பட்டியல் இனத்தவர் என போலி சான்றிதழ் வழக்கப்பட்டுள்ளது குறித்து தமிழகத்தில் பல புகார்கள் உள்ளன என்பதை அனைவரும் அறிவர் அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

போலி சான்றிதழ்

உச்ச நீதி மன்றத்தின் இந்த தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசு தானாக முன்வந்து தமிழகத்தில் மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள போலி சான்றிதழ்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் அதனடிப்படையில் அரசு வேலை வாய்ப்பினை தவறாக பெற்றுள்ளவர்கள் வேலையை நீக்கம் செய்ய வேண்டும்

உண்மையான பட்டியல் சமுதாய மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை அரசு வழங்க வேண்டும் என்றும் இந்து முன்னனி வலியுறுத்துகிறது. 

 

VIDEOS

Recommended