சமூக வலைத்தளங்களில் ஆபாசத்தை தடுக்க கடுமையான சட்டங்கள் அவசியம்.
கார்மேகம்
UPDATED: Nov 28, 2024, 7:49:18 PM
டெல்லி
சமூக வலைத்தளங்களில் ஆபாசம் கட்டுப்பாடின்றி சென்று கொண்டிருக்கிறது அதை தடுக்க தற்போதைய சட்டங்களை மிகவும் கடுமையாக்குவது அவசியம் என்று மத்திய மந்திரி தெரிவித்தார்
( பா. ஜனதா எம்.பி. கேள்வி)
நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின் போது பா.ஜனதா எம்.பி. அருண் கோவி சமூக வலைத்தளங்களில் ஆபாசம் மற்றும் பாலியல் தொடர்பான நிகழ்ச்சிகளை கட்டுப் படுத்த வழிமுறைகள் உள்ளதா?
தற்போதைய சட்டங்களை மிகவும் கடுமையாக்க திட்டம் உள்ளதா? என்று கேட்டார்
அதற்கு மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்தார் அவர் கூறியதாவது சமூக வலைத்தளங்கள் பத்திரிக்கை சுதந்திரத்துக்கான தளமாக இருக்கிறது அதில் ஒரு செய்தி சரியா தவறா என்று சரிபார்க்க எந்த முறையும் இல்லை
( கடுமையான சட்டங்கள்)
அதனால் சமூக வலைத்தளங்கள் கட்டுப்பாடின்றி சென்று கொண்டிருக்கின்றன ஆபாச அம்சங்களும் இடம் பெறுகின்றன இது பற்றி நாடாளுமன்ற நிலைக்குழு விவாதிக்க வேண்டும் சமூக வலைத்தளங்களில் ஆபாச அம்சங்களை கட்டுப்படுத்த தற்போதைய சட்டங்களை மிகவும் கடுமையாக்குவது அவசியம் இவ்வாறு அவர் கூறினார்.