• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • மன்னார்குடி அருகே கோயில் சொந்தமான இடத்தில் காடுகளை அழித்து அரசு நெல் சேமிப்புக் கிடங்கு மக்கள் எதிர்ப்பு.

மன்னார்குடி அருகே கோயில் சொந்தமான இடத்தில் காடுகளை அழித்து அரசு நெல் சேமிப்புக் கிடங்கு மக்கள் எதிர்ப்பு.

ஜெயராமன்

UPDATED: Feb 21, 2024, 6:49:49 AM

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மூவாநல்லூர் ஊராட்சியில் கொத்தவல்லி அய்யனாருக்கு சொந்தமான சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் இடம் உள்ளது.

Also Read : வங்கி கடனை கேட்ட அதிகாரிகளுக்கு கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த நபர்

இந்த இடத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை சேமித்து வைப்பதற்காக நெல் சேமிப்பு கிடங்கு கட்டுவதற்கு கடந்த ஆண்டு இடம் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் ஊராட்சி பொதுமக்கள் அந்த இடத்தில் சேமிப்புக் கிடங்கு கட்டக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக உயர் அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை மனுக்கள் அளித்திருந்தனர்.

Also Read : அண்ணாமலை என்கின்ற ஆடு வெட்டப்பட்டு 2024 இந்தியா கூட்டணி ஜெயிக்கும் - லியோனி

இந்த நிலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் திடீரென கோயிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள காடுகளை ஜேசிபி இயந்திர மூலம் அழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி கிராம பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஜேசிபி இயந்திரத்தை காடுகளை அழிக்காமல் தரிசு நிலங்களை மட்டுமே உபயோக படுத்திட வேண்டும் என தெரிவித்தனர்.

Also Read : பொன்னேரியில் 25 வருடங்களுக்குப் பிறகு போடப்படும் சாலை தரமற்று இருப்பதாக மக்கள் புகார்.

இது குறித்து கிராம மக்கள் கூறுகையில் கோயிலுக்கு சொந்தமான காடுகளில் பறவைகள் ஆடு மாடு விலங்குகள் உள்ளிட்டவைகள் இறை தேடி அங்கு சென்று மேய்ந்து வருகின்றன.

இந்த இடத்தில் நெல் சேமிப்பு கிடங்கு கட்டக்கூடாது வேறு இடத்தினை தேர்வு செய்து சேமிப்பு கிடங்கு கட்ட வேண்டும் என தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்தனர்.

Also Read திருவேற்காட்டில் திமுக பிரமுகர்களுக்கு இடையே உக்கட்சி பூசலால் பரபரப்பு. என் மீது தவறு இருந்தால் தூக்கில் தொங்க தயார் திமுக வட்ட செயலாளர் பரபரப்பு பேட்டி

இந்த இடத்தை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரிகள் பலத்த போலீசார் பாதுகாப்புடன் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருவதால் இப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

VIDEOS

RELATED NEWS

Recommended