• முகப்பு
  • குற்றம்
  • திருவேற்காட்டில் திமுக பிரமுகர்களுக்கு இடையே உக்கட்சி பூசலால் பரபரப்பு. என் மீது தவறு இருந்தால் தூக்கில் தொங்க தயார் திமுக வட்ட செயலாளர் பரபரப்பு பேட்டி.

திருவேற்காட்டில் திமுக பிரமுகர்களுக்கு இடையே உக்கட்சி பூசலால் பரபரப்பு. என் மீது தவறு இருந்தால் தூக்கில் தொங்க தயார் திமுக வட்ட செயலாளர் பரபரப்பு பேட்டி.

சுந்தர்

UPDATED: Feb 18, 2024, 2:06:55 PM

சென்னை அடுத்த திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட வீரராகவபுரம் பகுதியில் லோகநாதன்-தனலட்சுமி என்ற தம்பதிக்கு சொந்தமான இடம் 2000 ஆயிரம் சதுர அடியில் உள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு லோகநாதன் மறைந்த நிலையில் அந்த வீட்டை காலி செய்து வேறு ஒரு இடத்திற்கு தனலட்சுமி அவரது பிள்ளைகளுடன் குடி பெயர்ந்தார் தற்போது அந்த இடத்தில் ஏற்கனவே வாழ்ந்த வீடு பாழடைந்து உள்ள நிலையில் அந்த வீட்டை மாற்றி புதிதாக வீடு கட்டுவதற்காக பணிகளை மேற்கொண்டனர்.

Also Read : திருவள்ளூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள தடுப்பு சுவரில் அமர்ந்திருந்த நபர் தவறி கீழே விழுந்து இடுப்பு எலும்பு முறிவு

அப்போது அங்கு வந்த திருவேற்காடு நகராட்சி அதிகாரிகள் இந்த இடம் நகராட்சிக்கு சொந்தமான இடம் எனவும் வீடூ கட்டும் பணி நடக்க கூடாது என தடுத்து நிறுத்தினார்கள்.

மேலும் இந்த இடத்திற்கு நகராட்சி சார்பில் வரி கட்ட வேண்டும் என நகராட்சியே அனுப்பிய படிவத்தை காட்டினர், அரசுக்கு சொந்தமான இடத்திற்கு வரி கட்ட சொல்லி எப்படி படிவம் வரும் என கேள்வி கேட்ட நிலையிலும் இந்த இடம் தனக்கு சொந்தமான இடம் என தனலட்சுமி கூறிய நிலையில்

பட்டா உள்ளது, வரி கட்டுகிறேன் ,மின் இணைப்பு உள்ளது மேலும் 40 வருடமாக என் கணவர் பெயரில் உள்ள இடத்தை நகராட்சிக்கு சொந்தமானது என எப்படி கூற முடியும் என நகராட்சி அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பிய நிலையில் நகராட்சி அலுவலர்கள் விட்டு சென்றனர்.

Also Read : அண்ணாமலை என்கின்ற ஆடு வெட்டப்பட்டு 2024 இந்தியா கூட்டணி ஜெயிக்கும் - லியோனி

மேலும் இந்த இடத்தை திமுக வட்ட செயலாளர் கண்ணன் என்பவர் அபகரிக்க முயற்சி செய்வதாக அவதூறு பரப்பியதாக கூறப்பட்ட நிலையில் அப்போது அங்கு வந்த திமுக வட்டச் செயலாளர் கண்ணன் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டார். 

அப்போது பட்டா உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் உள்ள இடத்தை எப்படி நீங்கள் நகராட்சிக்கு சொந்தமானது என சொல்ல முடியும் என கேள்வி எழுப்பிய நிலையில் அருகாமையில் பல வீடுகள் உள்ள நிலையில் இந்த இடம் மட்டும் எப்படி நகராட்சிக்கு சொந்தமாகும் என கேள்வி கேட்டார் அதனை அடுத்து அதிகாரிகள் அங்கிருந்து கிளம்பி சென்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏழை பெண்ணுக்கு ஆதரவாக வந்த தன்னை நிலம் அபகரிக்க வருவதாக அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கூறி பொய்யான செய்தி பரப்பி வருகின்றனர்.

இதனை நிறுத்தவில்லை என்றால் நகராட்சி அதிகாரிகள் மீதும் நகர மன்ற கவுன்சிலரின் கணவரின் மீதும் வழக்கு தொடர்வேன் என தெரிவித்தார்.

இந்த நிலையில் திமுக வட்ட செயலாளர் கண்ணன் அளித்த பேட்டியில் :

திருவேற்காடு 13வது வட்டக் கழக செயலாளராக உள்ள நிலையில் நகராட்சிக்கு சொந்தமான இடம் நான் ஆக்கிரமித்து விட்டதாக தகவல் பரப்பி வருகின்றனர்.

இடத்தின் உரிமையாளர் தனலட்சுமி என்பவர் வீடு கட்ட வந்தபோது திருவேற்காடு பெண் நகரமன்ற கவுன்சிலரின் கணவர் இந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்வதற்காக வீடு கட்ட விடாமல் அதிகாரிகளை வைத்து தடுத்து வருகிறார்.

Also Read : காங்கிரஸ் வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்ய மாட்டேன் - வேல்முருகன்.

உரிய ஆவணங்கள் இருக்கும் பொழுது இடத்தை நான் ஆக்கிரமிப்பு செய்து விட்டதாக எப்படி கூறுவார்கள். அந்த பெண்ணுக்கு உதவி செய்ய போன நிலையில் இடத்தை நான் ஆக்கிரமிப்பு செய்து விட்டதாக கூறுகின்றனர்.

வருவாய் துறை அதிகாரிகள் பட்டா கொடுத்த நிலையில் நகராட்சி அதிகாரிகள் இந்த இடம் நகராட்சிக்கு சொந்தம் எனவும் அந்தப் பெண்ணுக்கு சொந்தம் இல்லை எனக் கூறுவது எப்படி ஏற்று கொள்வது இந்த இடத்திற்கு வரி பாக்கி இருப்பதாகவும் அந்தத் தொகையை உடனடியாக கட்ட வேண்டும் என நகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

Also Read : சிவகாசி அருகே பட்டாசு ஆலைவெடி விபத்தில் 10 பேர் பலி;முதற்கட்ட விசாரணையில் விபத்திற்கு மனித தவறே காரணம்.

அப்படி இருக்கும்போது நகராட்சி அதிகாரிகளின் துணையோடு பெண்ணின் இடத்தை அபகரிக்க திமுக நகர மன்ற கவுன்சிலரின் கணவர் அதிகாரிகளுடன் கை கோர்த்து இருப்பதாகவும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்தார்.

மேலும் இந்த இடத்தை தான் அபகரிக்க வந்தேன் என்றால் அதிகாரிகள் உரிய விசாரணை நடத்துங்கள் அப்படி அபகரித்தது உறுதி என்றால் தான் தூக்கில் தொங்கவும் தயார் என கூறினார் ஒரே கட்சியையச் சேர்ந்த திமுக பிரமுகர்களுக்கு இடையே ஏற்பட்ட உட் கட்சி பூசலால் திருவேற்காடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...

பேட்டி; கண்ணன் (வட்ட செயலாளர்-திமுக)

VIDEOS

RELATED NEWS

Recommended