காங்கிரஸ் வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்ய மாட்டேன் - வேல்முருகன்.
இரா.பாலமுருகன்
UPDATED: Feb 17, 2024, 7:19:26 PM
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் இன்று குற்றாலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது விரைவில் நடைபெற இருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பெருவாரியான இடங்களை இந்தியா கூட்டணி கைப்பற்றும் அதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி உறுதுணையாக இருக்கும் என தெரிவித்தார்.
Also Read : அண்ணாமலை என்கின்ற ஆடு வெட்டப்பட்டு 2024 இந்தியா கூட்டணி ஜெயிக்கும் - லியோனி
மேலும் இலங்கை தமிழர்கள் படுகொலை தொடர்பான கருத்தில் காங்கிரஸ் கட்சியுடன் தமக்கு உடன்பாடு இல்லாத காரணத்தினால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை தான் ஆதரித்து பிரச்சாரம் செய்ய மாட்டேன் என அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறிய போது பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட தமிழகத்தில் தங்கள் கட்சிக்கு ஒரு தொகுதியை திமுக கூட்டணியில் கேட்டு இருப்பதாகவும் விரைவில் அது குறித்து கூட்டணி பேச்சு வார்த்தை முடிந்தவுடன் தெரிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
Also Read : சிவகாசி அருகே பட்டாசு ஆலைவெடி விபத்தில் 10 பேர் பலி;முதற்கட்ட விசாரணையில் விபத்திற்கு மனித தவறே காரணம்.
தமிழகத்தில் பாஜகவின் நிலை குறித்து அவரிடம் கேள்வி எழுப்பிய போது பாஜக தமிழகத்தில் வேரூன்ற முடியாது என்ற நிலை தற்போது மாறி தமிழகத்தில் உள்ள கிராமங்களிலும் தற்போது பாஜக காலூன்றி வருகிறது என்றார்.
இந்நிகழ்ச்சியில் தென்காசி மேற்கு மாவட்ட செயலாளர் முகைதீன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.