- முகப்பு
- மாவட்டச் செய்தி
- சிவகாசி அருகே பட்டாசு ஆலைவெடி விபத்தில் 10 பேர் பலி;முதற்கட்ட விசாரணையில் விபத்திற்கு மனித தவறே காரணம்.
சிவகாசி அருகே பட்டாசு ஆலைவெடி விபத்தில் 10 பேர் பலி;முதற்கட்ட விசாரணையில் விபத்திற்கு மனித தவறே காரணம்.
அந்தோணி ராஜ்
UPDATED: Feb 17, 2024, 2:48:22 PM
விருதுநகர் மாவட்டம் வெம்பகோட்டை அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து 4 பெண்கள் 6 ஆண்கள் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 3 பேர் படுகாயம் அடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Also Read : அண்ணாமலை என்கின்ற ஆடு வெட்டப்பட்டு 2024 இந்தியா கூட்டணி ஜெயிக்கும் - லியோனி
இந்நிலையில் சம்பவம் நடந்த பட்டாசு ஆலையை சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன், மதுரை சரக டி.ஐ.ஜி ரம்யா பாரதி மற்றும் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர், இன்று மதியம் 12.30 மணியளவில் விபத்து நடந்துள்ளது.
இந்த ஆலை லைசென்ஸ் முறையாக பெற்று நடைமுறையில் தான் உள்ளது என்றும் ஒரே அறையில் விதியை மீறி 8 பேர் வேலை பார்த்தாக விசாரணையில் தெரிய வருகிறது.
Also Read : நான் முதலமைச்சர் தானா ? என சந்தேகத்துடன் இருக்கிறார் ஸ்டாலின்.
எனவே முதற்கட்ட விசாரணையில் விபத்திற்கு மனித தவறே காரணம் என தெரிய வருவதாகவும், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் விரிவான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாகவும்,
ஏற்கனே விபத்து ஏற்படாமல் இருக்க போலீஸ்,தீயணைப்பு,தொழிலாளர் நலத்துறை மற்றும் வருவாய்த்துறை இணைந்து 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களும் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.