• முகப்பு
  • குற்றம்
  • அரசுக்கு சொந்தமான 50 அடி உயர மலைகுன்றை தரைமட்டமாக்கி பலகோடி ரூபாய் மதிப்புள்ள செம்மண் கொள்ளை

அரசுக்கு சொந்தமான 50 அடி உயர மலைகுன்றை தரைமட்டமாக்கி பலகோடி ரூபாய் மதிப்புள்ள செம்மண் கொள்ளை

JK

UPDATED: Nov 29, 2024, 9:54:20 AM

திருச்சி மாவட்டம்

மணப்பாறை அடுத்துள்ள விடத்திலம்பட்டியலில் அரசுக்கு சொந்தமான கன்னிமலை மலை குன்று உள்ளது. சுமார் 50அடி உயரமுள்ள கொண்டது இந்த குன்று.

தற்போது இந்த மலையை காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் உதவியுடன் தரைமட்டமாக்கி கடந்த 10நாட்களுக்கும் மேலாக தினசரி 100லாரிகளில் செம்மண்ணாக மாற்றி அள்ளி கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

மணப்பாறை காவல் நிலைய எல்லையிலிருந்து வெறும் 2கி.மீ தூரமே உள்ளது விடத்திலாம்பட்டி கிராமம். காலையில் தொடங்கி மாலை வரை தினசரி நூற்றுக்கணக்கான லாரிகளில் திருச்சி -திண்டுக்கல் பைபாஸ் சாலையில் எவ்வித தடையுமின்றி எந்தவித அனுமதியின்றி கடத்திச் சென்றாக தெரிவிக்கின்றனர்.

செம்மண் கடத்தல்

இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து இதுகுறித்து மணப்பாறை வட்டாட்சியரிடம் புகார் கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அப்பகுதி மக்கள் அரசு நிகழ்ச்சிக்காக மணப்பாறை அருகே உள்ள பன்னாங்கொம்பு பகுதிக்கு வந்திருந்த மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் வந்தபோது அவரிடம் இச்சம்பவம் குறித்து முறையிட்டனர்.

தினசரி 100லாரிகளில் செம்மண் கடத்தப்படுகிறது என்பதைக் கேட்ட மாவட்ட ஆட்சியர் அதிர்ந்து போன ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க மணப்பாறை வட்டாட்சியருக்கு உத்தரவிட்டார்.  

வருவாய்த்துறையினர்

இந்த தகவல் வருவாய்த்துறையினர் மூலமே கொள்ளையர்களுக்கு சென்றதாகவும் சம்பந்தப்பட்ட நபர்கள் பயன்படுத்தி வந்த கடத்தல் லாரிகள் அங்கிருந்து எடுத்துக்கொண்டு தப்பி தலைமறைவாயினர் எனவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். 

பின்னர் சம்பவ இடத்திற்கு ஆய்வு என்று கண்துடைப்பாக தாசில்தார் செல்வம் பெயரளவுக்கு விசாரித்துவிட்டு அப்படி எதுவும் நடக்கவில்லை என்பது போன்று அறிக்கை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால், இதனை நம்பாத மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், சேலம் மாவட்டத்தை சேர்ந்த கனிமவள அதிகாரிகள் மூலம், சம்பந்தப்பட்ட இடத்தை அளவீடு செய்து அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு குறித்து அறிக்கை வழங்க உத்தரவிட்டார்.

கனிம வளத்துறை

இதனைத் தொடர்ந்து கடந்த இரு தினங்களாக சேலம் கனிம வளத்துறை அதிகாரிகள் மலை பெயர்ந்தெடுக்கப்பட்ட இடத்தை அளவீடு செய்து பின்னர் அறிக்கை வழங்கியதாக கூறப்படுகிறது.

அறிக்கையில் 50 அடி உயர மலைக்குன்றை தரைமட்டமாக்கி 5ஹெக்டேர் பரப்பளவில் உள்ள மணலை கடத்தியுள்ளனர் எனவும், இதன் மதிப்பு பல கோடி ரூபாய் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இதற்கு முன்பு புகழ்பெற்ற படுகளம் கோவில் குன்றையும் இதே கும்பல்தான் தரைமட்டமாக்கி திருட்டில் ஈடுபட்டனர் என்பது அப்பகுதி சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆளுங்கட்சி நபர்கள்

கடந்த சில நாட்களுக்கு முன்பு லாரியில் மணல் அள்ளிச் சென்றபோது விபத்துக்கள் ஏற்பட்டதாகவும், மேலும் இது தொடக்கதையாக வந்ததாகவும் பொதுமக்கள் அச்சத்துடன் தெரிவிக்கின்றனர்.

இந்த மணல் கடத்தல் விவகாரத்தில் ஆளுங்கட்சி சம்பந்தப்பட்ட நபர்கள் ஈடுபட்டு வருவதால் வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க தயங்கி வருவதாக அப்பகுதி சமூக ஆர்வலரும், பொதுமக்களும் அச்சத்துடன் தெரிவிக்கின்றனர்.

யார் குற்றம் செய்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கும் திராவிடம் மாடல் ஆட்சியின் முதல்வர் இச்சம்பவம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்?

 

VIDEOS

Recommended