கந்தர்வகோட்டை அருகே பாலம் அமைக்கும் பணியில் அலட்சியம் காட்டும் ஒப்பந்ததாரர்.

இளையராஜா

UPDATED: Aug 17, 2024, 9:53:25 AM

புதுக்கோட்டை மாவட்டம்

கந்தர்வகோட்டை அருகே மங்கனூர் கொப்பம்பட்டி சாலை கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலாக அமைக்கப்படாமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியிருந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

இந்த நிலையில் சாலையின் இரு புறங்களையும் இணைக்க நான்கு பாலங்கள் அமைக்கப்படுவதாகவும் இதில் பெரிய வாரி என்ற இடத்தில் உயர்மட்ட பாலம் அமைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

Latest District News in Tamil

இந்த நிலையில் தொடர்ச்சியாக அப்பகுதியில் மழை பெய்து வந்த நிலையில் அந்தப் பணிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தண்ணீர் சென்று வந்ததாகவும் அந்த தண்ணீர் வருவதை தடுக்கும் விதமாக அப்பகுதியில் உள்ள வரத்து வாரிகளை அடைத்து பாலம் அமைக்கும் பணியை ஒப்பந்ததாரர் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் வரத்து வாரிகள் அடைக்கப்பட்டுள்ளதால் பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரிடம் வலியுறுத்தியும் அதனை கேட்காமல் அலட்சியமாக ஒப்பந்ததாரர் செயல் பட்டதாக அப்பகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர்.‌

Latest Pudukkottai District News 

இந்நிலையில் நேற்று இரவு முதல் விடிய விடிய அப்பகுதியில் கொட்டிய கனமழையால் பாலம் அமைக்கும் பணிக்காக வரத்து வாரிகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தண்ணீர் செல்ல வழி இல்லாமல் பாலம் அருகே தற்காலிகமாக அமைக்கப்பட்ட மண் சாலையில் காட்டாற்று வெள்ளம் சென்றதால் மங்கனூர் கொப்பம்பட்டி செல்லும் சாலை துண்டிக்கப்பட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Breaking News Tamil 

மேலும் அப்பகுதியில் உள்ள வரத்து வாரிகள் அனைத்தும் மண்ணைக் கொண்டு மூடப்பட்டுள்ளதால் தண்ணீர் செல்ல வழியின்றி அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் சென்று அங்கு அமைக்கப்பட்டுள்ள வயல் வரப்புகளை அடித்துச் சென்றதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.‌   

மேலும் இனி வரக்கூடிய காலம் மழைக்காலம் என்பதால் சம்பந்தப்பட்ட பாலம் அமைக்கும் பணியை ஒப்பந்ததாரர் அலட்சியமாக செயல்படாமல் விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

படவிளக்கம் விவசாயி சாமிதுரை.

 

VIDEOS

Recommended