அரசு பேருந்தில் பயணித்த வயது முதிர்ந்த தம்பதியரிடம், தேநீரிலில் மயக்க மருந்து கலந்து கொடுத்து 40 சவரன் தங்க நகை பறிக்க சதி திட்டமா?
லட்சுமி காந்த்
UPDATED: Nov 9, 2024, 7:10:34 PM
திருவண்ணாமலை மாவட்டம்
தேசூர் பகுதியை சேர்ந்தவர் ஆதிசக்கரவர்த்தி என்கிற மணி (வயது70).இவரது மனைவி தமிழரசி (வயது 63) .இவர்களது மகன்கள் இருவரும் சென்னையில் பணிபுரிந்த வரும் நிலையில்,
இன்று பிற்பகல் மகன்களை பார்ப்பதற்காக , கழுத்தில் சுமார் 40 சவரன் வரை தங்க நகை அணிந்து கொண்டு மூதாட்டி தமிழரசி தன்னுடைய கணவர் ஆதி சக்கரவத்தியுடன் தேசூரில் இருந்து புறப்பட்டு காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் வந்திறங்கி பின்னர் சென்னை கோயம்பேடு இடைநில்லா பேருந்தில் ஏறி இருக்கின்றனர்.
அப்போது பேருந்தில் இருந்த பயணி ஒருவர் தான் அமர்ந்த இருக்கையில் இருந்து எழுந்து இருவரும் ஒரே இருக்கையில் அமருமாறு கூறியிருக்கிறார்.
Latest Crime News In Tamil
இதனையெடுத்து இருவரும் ஒரே இருக்கையில் அமர்ந்த நிலையில் அந்த மர்ம நபர் தனது தாய் தந்தை போல் நீங்கள் இருவரும் உள்ளீர்கள் என உணர்ச்சிபூர்வமாக பேசி டீ அருந்த வலியுறுத்துள்ளார்.
இந்த நிலையில் இருவரும் டீ-யை வாங்கி அருந்தி கொண்டிருந்த போது, யதேச்சையாக அப்பேருந்தில் இரண்டு காவலர்கள் பயணம் செய்ய ஏறி இருக்கின்றனர். இதனைக் கண்ட அந்த மர்ம நபர் பேருந்தை விட்டு இறங்கி தலைமறைவாகி விட்டார்.
இதனையடுத்து பேருந்து புறப்பட்ட சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவிலேயே முதியவர்கள் இருவரும் வாந்தி எடுத்து மயக்கமுற்றனர். மயங்கிய நிலையில் இருந்ததை கண்ட சக பயணிகள் பூக்கடை சத்திரம் அருகே பேருந்து நிறுத்தி முதியவர்கள் இருவரையும் 108 மூலம் மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Breaking News Today In Tamil
இதையடுத்து காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இது குறித்து அறிந்த சிவகாஞ்சி காவல்துறையினர் வயதான தம்பதியிடம் விவரங்களை கேட்டு அறிந்து, தலைமறைவான மர்ம நபரை கண்டுபிடிக்க கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர் .
சென்னையில் உள்ள தங்களது மகனை சந்திப்பதற்காக கணவருடன் அதிக நகைகளை அணிந்து கொண்டு மங்களகரமாக சென்ற முதிய தம்பதிகளிடம் , நகையை பறிக்க திட்டமிட்டு தேநீரில் மயக்க மருந்து கலந்து கொடுத்து நூதன முறையில் கொள்ளை அடிக்க முயற்சி செய்த சம்பவம் காஞ்சிபுரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.