கொலை மிரட்டல் விடுத்த விசிக நிர்வாகியை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் புகார்.
சுரேஷ் பாபு
UPDATED: Nov 6, 2024, 6:33:55 PM
கடலூர் மாவட்டம்
புவனகிரி அடுத்த மஞ்சன்கொல்லை கிராமத்தில் உள்ள பிரச்சனையை பெரிதாக்கி, வன்னியர் சங்கத்தின் மாநில தலைவர் பு.த.அருள்மொழி மற்றும் அப்பகுதி மாவட்ட செயலாளரின் தலையை துண்டிப்பேன் என ஒருமையில் தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்து, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்த நீதி வள்ளல், அரங்க தமிழ் ஒளி, அறிவுடைநம்பி, செல்வராணி, பா.தாமரைசெல்வன் உள்ளிட்ட விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி
பாட்டாளி மக்கள் கட்சி
திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிவாச பெருமாளிடம் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மேற்கு மாவட்ட செயலாளர் இ.தினேஷ்குமார் தலைமையில் மாநில இளைஞர் சங்க செயலாளர் பாலா என்கிற பாலயோகி, மாவட்ட அமைப்பு செயலாளர், வெங்கடேசன்,வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் பூபதி, தொகுதி செயலாளர் கண்ணன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றிகையிட்டு புகார் மனு அளித்தனர்.
விசிக
ஆளும் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தொடர்ந்து பாமகவினர் மீது அவதூறு பரப்பி வருகின்றனர். எனவே கட்சி பாகுபாடின்றி விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்யவில்லையெனில் டாக்டர் ராமதாஸ் அறிவுறுத்தலின் பேரில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் இணைந்து அடுத்தகட்ட போராட்டத்தில் ஈடுபடப்போவதாக எச்சரித்தனர்.
பேட்டி : பாலா என்கிற பாலயோகிமாநில இளைஞர் சங்க செயலாளர்.