கோத்தகிரியில் யானை தாக்கி பெண் பலி.

அச்சுதன்

UPDATED: Sep 21, 2024, 12:30:33 PM

நீலகிரி மாவட்டம் 

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கெங்கரை ஆண்டியாளா மந்தட்டி பகுதியை சேர்ந்தவர் நிர்மலா 53. இவர் அதே பகுதியில் உள்ள தேயிலை தோட்டதை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்.

இன்று காலை வழக்கம் போல் நிர்மலா மற்றும் பக்கத்து தொட்டத்தின் உரிமையாளர்கள் என மூன்று பேர் தோட்ட பணிக்கு சென்றுள்ளனர் அப்போது நிர்மலா மட்டும் தனது தொட்டத்திற்கு செல்வதற்காக வேறு ஒரு வழியில் சென்றதாக கூறப்படுகிறது.

Latest Nilgiris District News In Tamil

அப்போது அந்த பகுதியின் வணப்பகுதியில் நின்றிருந்த காட்டு யானை நிர்மலாவை கண்டவுடன் மிகவும் ஆக்ரோசமாக தாக்கியுள்ளது. 

விமலாவின் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தபோது விமலாவை யானை தாக்கி விட்டு வனப்பகுதிக்குள் சென்று கொண்டு இருந்தது.

உடனடியாக விமலாவை அவர்கள் மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். ஆனால் விமலா வரும் வழியிலேயே உயிரிழுந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

யானை

மேலும் யானை தாக்கி மனித உயிர்கள் பலியாகி வருவது தற்போது கோத்தகிரி பகுதியில் தொடர்கதயாகி விட்டது. 

எனவே வனத்துரையினர் இது போன்று ஊருக்குள் வரும் காட்டு யானைகளை அடர்ந்த வணப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யானை மிதித்து பெண் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

VIDEOS

Recommended