- முகப்பு
- மாவட்டச் செய்தி
- பள்ளிகளை சீரமைக்க ஒதுக்கப்பட்ட ஒரு கோடி நிதியில் எந்த பணிகளும் செய்யவில்லை என குற்றம்சாட்டி அதிமுக வெளிநடப்பு.
பள்ளிகளை சீரமைக்க ஒதுக்கப்பட்ட ஒரு கோடி நிதியில் எந்த பணிகளும் செய்யவில்லை என குற்றம்சாட்டி அதிமுக வெளிநடப்பு.
ரமேஷ்
UPDATED: Sep 30, 2024, 7:55:53 PM
கும்பகோணம்
மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் சரவணன், தலைமையிலும், மாநகராட்சி ஆணையர் லட்சுமணன், மற்றும் துணை மேயர் தமழிழகன் முன்னிலையிலும் இன்று நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய அதிமுக மாமன்ற உறுப்பினர் ஆதிலட்சுமி ராமமூர்த்தி, கும்பகோணம் மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளை சீரமைக்க ஒதுக்கப்பட்ட ஒரு கோடிக்கு மேலான நிதியில் எந்த பணிகளும் செய்யப்படவில்லை என குற்றம் சாட்டினார்.
அதற்கு பதில் அளித்த துணை மேயர் தமிழழகன், உங்கள் ஆட்சி போல் எங்கள் ஆட்சி இல்லை, பொத்தாம் பொதுவாக எந்த பணிகளும் நடைபெறவில்லை என குற்றம் சாட்டக் கூடாது என கூறினார்.
அதிமுக
அதற்கு அதிமுக கவுன்சிலர் ஆதிலட்சுமி ராமமூர்த்தி, வாருங்கள் பள்ளிகளுக்குச் நேரில் சென்று பார்வையிடுவோம் என அழைப்பு விடுத்தார்.
அதன் தொடர்ச்சியாக பேசிய மற்றொரு அதிமுக மாவட்ட உறுப்பினர் பத்மகுமரேசன், தாராசுரம் பகுதியில் 5 வார்டுகளுக்கு குடிநீர் சப்ளை அரை குறையாக செய்யப்படுகிறது.
குடிநீர் வசதி இல்லாததால் தாராசுரத்தில் வீடுகளை விட்டே காலி செய்து செல்வதாக குற்றம் சாட்டினர். இதனால் அதிமுக மாமன்ற உறுப்பினர்களுக்கு, திமுக துணை மேயர் தமிழழகன் மற்றும் திமுக மாமன்ற உறுப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
Latest Kumbakonam News Today In Tamil
இதையடுத்து அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் ஆதிலட்சுமி ராமமூர்த்தி, பத்மகுமரேசன், கவுசல்யா ஆகியோர் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்வதாக கூறி வெளியேறினார்கள்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் ஆதிலட்சுமி ராமமூர்த்தி கூறும்போது, கும்பகோணம் மாநகராட்சியில் கல்விக்கென்று ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு நடந்துள்ளது.
12 துவக்கப் பள்ளிகளில் பணிகள் மேற்கொள்வதற்காக ஒரு கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் 12 பள்ளிகளிலும் எந்த பணிகளும் நடைபெறவில்லை. ஒவ்வொரு மாதமும் குடிநீருக்கென்று நிதி ஒதுக்குகிறார்கள்.
ALSO READ | தினம் ஒரு திருக்குறள் 01-10-2024
திமுக
குடிநீர் பிரச்சினை ஒவ்வொரு நாளும் ஏற்பட்டு கொண்டு இருக்கின்றது. திமுக அரசு இதனை கண்டு கொள்வதில்லை. மாநகராட்சியும் கண்டுகொள்ளாததால் நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம் என்றார்.
அதனைத் தொடர்ந்து பேட்டி அளித்த பத்மகுமரேசன் கூறும்போது, தாராசுரம் பகுதியில் கடந்த ஒரு வார காலமாக தண்ணீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. விடியற்காலையில் சுமார் அரை மணி நேரம் மற்றும் ஒரு மணி நேரம் மட்டுமே குடிநீர் திறந்து விடப்படுகிறது.
இது தொடர்பாக பலமுறை மனு அளித்தோம் அதிகாரிகளிடம் தெரிவித்தும் அதற்கான தீர்வு கிடைக்கப் பெறவில்லை. பாதாள சாக்கடையை இணைக்காமல் உள்ளனர். தாராசுரம் பேரூராட்சியாக இருந்தபொழுது அனைத்து பணிகளும் நடைபெற்றது.
மாநகராட்சி உடன் இணைக்கப்பட்ட பிறகு வரிகள் உயர்த்தப்பட்டுள்ளதே தவிர அதற்கான பணிகள் மந்தமாக நடக்கிறது. தெருவிளக்கு எரியவில்லை என புகார் அளித்தால் ஒரு வாரம் பத்து நாள் கழித்து தான் பார்க்க வருகின்றனர்.
தாராசுரம் பகுதிகளில் அடிப்படை வசதிகளே செய்து கொடுக்கவில்லை. இதனை பலமுறை புகார் அளித்தோம் நடவடிக்கை எடுக்காததால் இன்று கூட்டத்தை புறக்கணித்து வெளி நடப்பு செய்துள்ளதாக தெரிவித்தனர்.