4 டன் குப்பைகளை எரியூட்டி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் கும்மிடிப்பூண்டி மாநகராட்சி.

L.குமார்

UPDATED: Sep 21, 2024, 2:01:43 PM

கும்மிடிப்பூண்டி 

15 வார்டுகளை உள்ளடக்கிய கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேறக்கூடிய சுமார் 4டன் குப்பைக் கழிவுகள் அன்றாடம் பேரூராட்சி தூய்மை பணியாளர்களால் சேகரிக்கப்பட்டு கும்மிடிப்பூண்டியில் உள்ள சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையோரும் பேரூராட்சி நிர்வாக ஊழியர்களால் தினந்தோறும் கொட்டப்பட்டு இரவு நேரங்களில் ஏரியூட்டப்பட்டு வருகிறது.

இதனால் அருகாமையில் உள்ள கங்கன் தொட்டி, பாலகிருஷ்ணாபுரம் மேட்டு காலனி வெட்டு காலனி வள்ளியம்மை நகர் உள்ளிட்ட பகுதிகள் கரும்புகையால் சூழப்பட்டு பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகி வருகின்றனர். 

தமிழில் மாவட்ட செய்திகள்

முன்னதாக பிர்லா கார்பன் தனியார் தொழிற்சாலையின் சமூக நல மேம்பாட்டு நிதியில் சுமார் 30 லட்சத்தை ஒதுக்கி சிப்காட் வளாகத்தில் நவீன குப்பை எரியட்டும் இயந்திரம் பயன்பாட்டில் கொண்டுவரப்பட்டது. 

ஆனால் அதை முறையாக பயன்படுத்தாமல் சுமார் 30 லட்சம் அரசு பணத்தை கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகம் வீணடித்து வருவதுடன் பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு குந்தகம் விளைவித்து வருகின்றனர். 

District News & Updates in Tamil 

இவ்வாறு அரசு பணத்தை வீணடிப்பதுடன், சட்டவிரோதமாக குப்பை கழிவுகளை தேசிய நெடுஞ்சாலையோரம் கொட்டி எரித்து பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாக செயல் அலுவலர் பாஸ்கர் மீதும், வேடிக்கை பார்க்கும் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் லிவிங்ஸ்டன் மீதும், மாவட்ட நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பாதிப்புக்குள்ளாகும் மக்களின் ஒருமித்த குரலாக உள்ளது.

 

VIDEOS

Recommended