சிதம்பரம் சப் கலெக்டர் அலுவலகத்தில்  இஸ்லாமியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகை.

சண்முகம்

UPDATED: Sep 22, 2024, 5:32:21 PM

கடலூர் மாவட்டம்

சிதம்பரம் வண்டி கேட்டு அருகே உள்ள பள்ளிப்படை பகுதியில் குட்ட பக்ரி தர்கா உள்ளது இந்த பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் பல ஆண்டுகளாக அப்பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர்

திடீரென்று அப்பகுதி குடியிருப்பு வாசிகளை ஒரு சிலர் வீடுகளை காலி செய்ய சொல்லி வருவதாக அப்பகுதி மக்களிடம் வீடுகளை காலி செய்ய சொல்லி மனு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

Latest District News In Tamil 

அதனைத் தொடர்ந்து சிதம்பரம் சப் கலெக்டர் அலுவலகத்திற்கு நூற்றுக்கு மேற்பட்ட பள்ளிப்படை குட்ட பக்கிரி தர்காவில் வசிக்கும் பொதுமக்கள் இஸ்லாமியர்கள் ஆண்கள், பெண்கள் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி நகர செயலாளர் சாகுல் தலைமையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் தமிமுன் அன்சாரி, நகர செயலாளர் சையது இப்ராஹிம் உள்ளிட்டோர் ஒன்று திரண்டு வந்தனர். 

அதனை அடுத்து சப் கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க சென்றனர் அங்கு சப் கலெக்டர் இல்லாததால் சப் கலெக்டர் நேர்முக உதவியாளர் புகழேந்திடம் மனு கொடுத்தனர்.

Breaking News Today In Tamil 

அந்த மனுவில் கூறியிருப்பதாவது :

சிதம்பரம் வண்டி கேட்டு அருகே உள்ள பள்ளிப்படை பகுதியில் குட்ட பக்ரி தர்கா உள்ளது இந்த பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் பல ஆண்டுகளாக அப்பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடியிருந்து வருகிறோம்.

நாங்கள் இருக்கும் இடத்திற்கு வரியும் கட்டி வருகின்றோம். திடீரென்று அப்பகுதி குடியிருப்பு வாசிகளை ஒரு சிலர் வீடுகளை காலி செய்ய சொல்லி எங்களிடம் மனு கொடுத்தனர்.

இஸ்லாமியர்கள்

மேலும் எங்களை அந்த எடுத்து விட்டு காலி செய்யக் கூடாது நாங்கள் வரிகட்டி வசித்து வருகிறோம் திடீரென எங்களை காலி செய்ய சொன்னால் நாங்கள் எங்கு செய்வோம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது. 

மனுவைப் பெற்றுக் நேர்முக உதவியாளர் நடவடிக்கை எடுப்பதாக கூறினார் அது தொடர்ந்து சிதம்பரம் தாலுகா அலுவலகத்திற்கு சென்று தாசில்தார் ஹேமா ஆனதியை சந்தித்து மனு கொடுத்தனர். இந்த சம்பவத்தால் அப்போது பரபரப்பு ஏற்பட்டது.

 

VIDEOS

Recommended