- முகப்பு
- மாவட்டச் செய்தி
- ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நதிநீர் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தை வந்தடைந்தது.
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நதிநீர் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தை வந்தடைந்தது.
சுரேஷ் பாபு
UPDATED: Sep 24, 2024, 12:23:01 PM
திருவள்ளூர் மாவட்டம்
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கடந்த 19ஆம் தேதி தமிழகத்திற்கு முதல் கட்டமாக 500 கன அடி கிருஷ்ணா நதி நீர் திறக்கப்பட்டு படிப்படியாக 1300 கன அடியாக உயர்த்தப்பட்டு திறக்கப்பட்ட தண்ணீர் ஆனது நேற்று காலை 152 கிலோ மீட்டர் தூரம் பயணித்து தமிழக எல்லையான திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை ஜுரோ பாயிண்ட்டை வந்தடைந்தது.
ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட்க்கு 150 கன அடியாக வந்தடைந்த கிருஷ்ணா நதிநீர் 25 கிலோ மீட்டர் தூரம் பயணித்து இன்று காலை 8 மணியளவில் திருவள்ளூர் மாவட்டம் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு வந்தடைந்தது.
கிருஷ்ணா நதிநீர்
மேலும் கண்டலேறு அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு உயர்த்தப்படும் பட்சத்தில் நீர் வரத்தும் கணிசமாக உயிரும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்ந்து நீர்வரத்து வந்து கொண்டிருப்பதால் தண்ணீர் ஆனது வேகமாக வந்து கொண்டிருக்கிறது
இந்த தண்ணீரில் குளிக்கவோ துணி துவைக்கவோ அனுமதி இல்லை என்றும் அப்படி மீறுபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.