• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • அரசு மருத்துவமனைகளில் குப்பைகள் எரிக்கப்படாது என சுகாதாரத்துறை அமைச்சர் உறுதி அளித்த பின்னரும்  எரிக்கப்படுவது ஏன் ?

அரசு மருத்துவமனைகளில் குப்பைகள் எரிக்கப்படாது என சுகாதாரத்துறை அமைச்சர் உறுதி அளித்த பின்னரும்  எரிக்கப்படுவது ஏன் ?

லட்சுமி காந்த்

UPDATED: Aug 29, 2024, 3:59:22 AM

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை

தினந்தோறும் உள் மற்றும் புற நோயாளிகள் என சுமார் 1000க்கும் மேற்பட்டவர்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். 

கடந்த பல மாதங்களாக மருத்துவமனை நிர்வாகத்தின் மெத்தனப் போக்கினால் அரசு தலைமை மருத்துவமனையில் சுகாதாரக் கேடு ஏற்படுவதாக நோயாளிகள் தொடர்ந்து புகார் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

Latest Kancheepuram District News 

மருத்துவமனையில் தினமும் சேரும் குப்பைகளையும் மருத்துமனையின் கழிவுகளையும் எடுத்துச் சென்று ஆக்சிஜன் குழாய் செல்லும் பகுதியில் சுமார் 20 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டி அதில் குப்பைகளை கொட்டி தீ வைத்து எரித்து வருகின்றார்கள். 

அதேபோல் சுமார் 20 அடி தூரத்தில் ஆக்சிஜன் பிளாண்ட் உள்ளது, ஆக்சிஜன் பிளாண்ட்டில் இருந்து குழாய்கள் மூலம் வார்டுகளுக்கு ஆக்சிஜன் எடுத்து செல்லப்படுகின்றது.

Breaking News

அதனுடைய குழாய்கள் தீ வைத்து எரிக்கப்படும் இடத்திலிருந்து சுமார் 10 அடி தூரத்தில் செல்கின்றது. இதனால் தீப்பற்றும் அபாயமும் உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் அரசு தலைமை மருத்துவமனை எப்போதும் புகை மூட்டத்துடனே காணப்படுகின்றது என அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் தொடர்ந்து புகார் கூறுகிறார்கள்.

காற்று மாசுபாடு

குப்பைகள் பிளாஸ்டிக் பொருட்கள், மருத்துவ கழிவுகள் தொடர்ந்து எரிப்பதால், நைட்ரஜன் சயனைடு, வினைல் குளோரைடு போன்ற நச்சு வாயு வெளியேறி அதை சுவாசிக்கும்போது, கேன்சர், சுவாச கோளாறு, ஆஸ்துமா, கண், மூக்கு, எரிச்சல் உட்பட பல்வேறு பிரச்னைகளால் நோயாளிகளும், நோயாளிகளின் உறவினர்களும் பாதிக்க வாய்ப்பு உள்ளது . 

மேலும், காற்றில் கலக்கும் நச்சு புகைகளை நுகரும் நோயாளிகளுக்கு, ஒருவித மயக்க நிலை ஏற்படுகிறது என கூறப்படுகிறது.

அதேபோல் மருத்துவமனையின் ஒப்பந்த பணி செய்யும் துப்புரவு பணியாளர்கள் ஆபத்தான பிளாஸ்டிக் குப்பைகளையும் எரிக்கின்றனர். இதனால், மருத்துவமனையை சுற்றி அவ்வப்போது பெரும் புகை மூட்டம் எழுகிறது. மருத்துவமனையில், உள் நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறுபவர்கள், புகை மூட்டத்தில் மூச்சு விட முடியாமல் கடும் அவதிப்படுகின்றனர்.

மருத்துவமனையில் சேருகின்ற குப்பைகளை காஞ்சிபுரம் மாநகராட்சியின் குப்பை வண்டிகள் தினந்தோறும் எடுத்துச் செல்ல வேண்டும். ஆனால் மூன்று மாதத்திற்கு ஒரு முறை தான் வருகின்றார்கள். மற்ற நாட்களில் வந்தது போலியாக கையொப்பம் போடுகிறார்கள் என கூறப்படுகிறது.

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

எனவே, இது போன்ற செயல்களால், காற்றை மாசுபடுத்துவது சட்டப்படி குற்றம், சமுதாயத்துக்கும் தீங்கு. இதனை மீறுபவர் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகின்றனர்.

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அரசு மருத்துவமனைகளில் இனிமேல் குப்பைகள் எரிக்கப்படாது என உறுதி அளித்த பின்னரும் கூட குப்பைகள் எரிக்கப்படுவது தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Dmk

VIDEOS

Recommended