• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • திருவேற்காடு கோலடி ஏரியில் 2 வது நாளாக ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டம்.

திருவேற்காடு கோலடி ஏரியில் 2 வது நாளாக ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டம்.

ஆனந்த்

UPDATED: Oct 20, 2024, 7:59:20 AM

திருவேற்காடு

நகராட்சிக்கு உட்பட்ட கோலடி ஏரி 169 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியாகும். ஆனால் தற்போது ஆக்கிரமிப்பு காரணமாக 112 ஏக்கர் அளவுக்கு ஏரியின் பரப்பளவு குறைந்து விட்டது.

இந்த ஏரியில் பல்வேறு இடங்களில் ஏரியை ஆக்கிரமிப்பு செய்து 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன. இந்த ஆக்கிரமிப்பு வீடுகள் மற்றும் கட்டடங்களை அகற்ற பூந்தமல்லி வருவாய் துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் அப்பகுதியில் நேற்று ஆய்வு மேற்கொண்டதில் 25 கட்டிடங்கள் புதிதாக கட்டும் பணி நடைபெற்று வந்தது தெரியவந்தது.

ஆக்கிரமிப்பு

இதனைத் தொடர்ந்து புதிதாக கட்டப்பட்டுள்ள ஏழு கட்டிடங்கள் தற்போது கட்டுமான பணிகள் நடந்து வரும் கட்டடங்களை நேற்று மாலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வருவாய் துறையினர் இடித்து அகற்றினர். 

வருவாய்த்துறை அதிகாரிகளின் திடீர் நடவடிக்கையால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க திருவேற்காடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

மேலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள குடியிருப்புகள் கணக்கீடு செய்யப்பட்டு முறையாக நோட்டீஸ் வழங்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

வருவாய்த்துறையினர்

இந்த நிலையில் இரண்டாவது நாளாக கோலடி ஏரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட உள்ள குடியிருப்புகளை இடிப்பதற்காக வருவாய்த்துறையினர் வந்தனர். இதற்கு அப்பகுதி உள்ள பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

வருவாய்த்துறையினர் மற்றும் போலீசாரை அந்தப் பகுதிக்குள் உள்ளே விடாமல் அப்பகுதி மக்கள் தடுத்து நிறுத்தினர். வருவாய்த்துறையினருக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து வீடுகளை அகற்ற வந்த அதிகாரிகள் மற்றும் போலீசாரை கண்டித்து அப்பகுதி மக்கள் 300க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

Latest Online News In Tamil

பல ஆண்டுகளாக வசித்து வரும் தங்களை இங்கிருந்து வெளியேற்றக் கூடாது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து அப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பின்னர் வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Breaking News Today In Tamil 

இதில் புதிதாக கட்டப்பட்டுள்ள 20 கட்டடங்களை இடிக்க முடிவு செய்யப்பட்டது. பேச்சுவார்த்தையை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். 

இதனைத் தொடர்ந்து கட்டிடங்களை இடிக்கும் பணியில் வருவாய்த்துறையினர், போலீஸ் பாதுகாப்புடன் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனால் கோலடி ஏரி பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

 

VIDEOS

Recommended